ஸ்பெஷல்ஸ்
கமல்ஹாசன் நடிக்கும் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் தலைப்புக்கு டாக்டர்கள் சங்கம் கடும்எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளது.
சண்டியர் படத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி கிளப்பியஎதிர்ப்பால் அத விருமாண்டி என்று மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் கமல்.
இப்போது மீண்டும் டாக்டர்களிடம் இருந்தே கமலுக்கு எதிர்ப்பு வந்துள்ளது. வசூல்ராஜாஎம்.பி.பி.எஸ். என்ற தலைப்பு டாக்டர் தொழிலை அவமதிப்பதாக உள்ளதாகக் கூறியுள்ளதமிழ்நாடு டாக்டர்கள் சங்கம், பெயரை மாற்றக் கோரி படத்தின் இயக்குனர் சரணுக்குக் கடிதம்அனுப்பியுள்ளது.
இதையடுத்து படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தம் ஏதுமில்லை என்றும், டாக்டர்களைஇழிவுபடுத்தும் எந்தக் காட்சிகளும் படத்தில் இல்லை என்றும் கமல்-சரண் தரப்பில் இருந்து பதில்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், டாக்டர்கள் சங்கம் இதனால் அமைதியாகிவிடவில்லை. பெயரை மாற்றியே ஆக வேண்டும்என்று ஒற்றைக் காலில் நின்று வருகிறது.
பெயரை மாற்றாவிட்டால் நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் டாக்டர்கள் சங்கம்எச்சரித்துள்ளது.
இதனால் கமல் தரப்பு குழம்பிப் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











