twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சதிலீலாவதி, தெனாலி, காதலா காதலா, .. கமலின் பல படங்களை ரிப்பீட் மோடில் பார்க்க வைத்தவர் கிரேஸி மோகன்!

    மறைந்த எழுத்தாளர், நடிகர், வசனகர்த்தா கிரேஸி மோகன், நடிகர் கமலின் பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

    |

    சென்னை: படம் முழுக்க திரும்பத் திரும்பப் பார்த்தாலும் வயிறு வலிக்க சிரிக்க முடியும் என்பதை கமல் படங்கள் மூலம் செய்து காட்டியவர் மறைந்த வசனகர்த்தா கிரேஸி மோகன்.

    தமிழில் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வசனம் எழுதியவர் கிரேஸி மோகன். சில வசனங்களைக் கேட்கும் போதே, நிச்சயம் இது கிரேஸி மோகனுடையதாகத் தான் இருக்கும் என பாமரர்களும் யூகிக்கும் அளவிற்கு நகைச்சுவை எழுத்தில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் அவர்.

    அதிலும், குறிப்பாக கமலுடன் இவர் கூட்டணி வைத்த படங்கள் எல்லாமே காலத்தால் அழியாதவை.

     கபடநாடக வேஷதாரி:

    கபடநாடக வேஷதாரி:

    கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதை கிரேஸி மோகன் தான். ‘கபடநாடக வேஷதாரி' இந்த வார்த்தையைக் அப்பு கமல் சொல்லும் போது, ‘இத்துனூண்டு உடம்புக்குள்ள இவ்ளோ பெரிய வசனமா?' என மௌலியைப் போலவே நம் மைண்ட் வாய்ஸிலும் ஆச்சர்யம் வரும். அந்தளவிற்கு தன் கதை, வசனம் என ஒவ்வொன்றிலும் தனித்துவமாக மிளிர்ந்தவர் கிரேஸி.

    விதவிதமான காமெடி:

    விதவிதமான காமெடி:

    மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நான்கு கமல்கள். ஆனால் நான்கு பேருமே நான்கு விதமாக கிச்சுகிச்சு மூட்டுவார்கள். அந்தளவிற்கு வசனத்தில் விட்டு விளையாடியிருப்பார் கிரேஸி. தனக்கான வட்டார மொழி என எதையும் வகுத்துக் கொள்ளாமல், எல்லா ஸ்லாங்கில் காமெடி செய்யத் தெரிந்தவர் கிரேஸி என்பது அவரது தனிச்சிறப்பு.

    எல்லா வட்டார மொழியும்:

    எல்லா வட்டார மொழியும்:

    சதிலீலாவதி படத்தில் கோவைத்தமிழிலும், வசூல் ராஜாவில் சென்னைத் தமிழிலும் ஒவ்வொரு வசனங்களையும் செதுக்கி இருப்பார். பஞ்சதந்திரம், தெனாலி, அவ்வை சண்முகி, காதலா காதலா எல்லாம் கமல்-கிரேஸிமோகன் கூட்டணியில் வந்த வேற லெவல் காமெடி படங்கள்.

    டைமிங் காமெடி:

    டைமிங் காமெடி:

    வசனகர்த்தாவாகப் பணியாற்றிய அதே சமயம் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். அப்படங்களில் எல்லாம் பிரேமில் சமயங்களில் ஹீரோக்களையும் ஓரங்கட்டி, தனது டைமிங் காமெடியால் மக்களை சிரிக்கவைத்தவர் கிரேஸி மோகன்.

    சிரிப்போடு சிந்தனை:

    சிரிப்போடு சிந்தனை:

    கமல் - கிரேஸி கூட்டணி என்றுமே நம்மை ஏமாற்றியதில்லை என்றே கூறலாம். அந்தளவிற்கு பல படங்கள் மூலம் நம்மை சிரிக்கவும், கூடவே சிந்திக்கவும் வைத்தவர் கிரேஸி. அதனால்தான் இவரின் வசனங்களில் வரும் படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாது. இனி வரும் கமலின் காமெடி படங்களில் நாம் கிரேஸியை மிஸ் செய்வோம் என்பது மட்டும் நிச்சயம் உறுதி.

    English summary
    Dialogue writer Crazy Mohan had written unforgettable dialogues for many Kamal films
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X