உலக நாயகனின் கிளாசிக் படங்கள்.. எப்போதுமே கமல் தான் டாப்.. மெய்சிலிர்க்கும் ரஞ்சித் ஜெயகொடி !

சென்னை : கமலஹாசனின் கிளாசிக் படங்கள் எப்போதுமே டாப் என்று தான் ரஞ்சித் ஜெயகொடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

சினிமாவை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக பார்க்கும் நம்மில் பலருக்கு தெரியாது, ஒரு திரைப்படத்தை எடுத்து முடிப்பதற்கு எத்தனை நபர்களின் உழைப்பு தேவை என்று,அப்படிப்பட்ட கலையை பலரும் கற்று சினிமாவை தொழிலாக செய்கின்றனர்.

கலைக்காக தன்னை முழுமையாக அற்பணித்தவர்கள் சிலர், அதில் ஒருவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் எத்தனையோ சாதனைகள் தமிழ் சினிமாவில் செய்துள்ளார்.

 நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் பெரும் பங்கு உலக நாயகன் கமல் ஹாசனுக்கு உண்டு.டிஜிட்டல் கேமரா முதல் லைவ் ரெக்கார்டிங் வரை வித்தியாசமான பல அம்சங்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் தான் முதன் முதலில் நவீன லாப்டாப் தமிழ் சினிமாவில் காட்டப்பட்டது. அப்படி பல புதிய முயற்சிகளை செய்பவர் கமல்.

 பெருமைக்குரியவர்

பெருமைக்குரியவர்

தமிழ் சினிமாவில் ஆவிட் எனும் படத்தொகுப்பு சாப்ட்வேரை அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அந்த சாப்ட்வேரை பயன்படுத்தி முதன் முறையாக எடிட் செய்த தமிழ் திரைப்படம் மகாநதி. பொதுவாக சினிமாவில் சவுண்ட் (ஒலி) ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது டப்பிங் என்ற முறைக்கு பதிலாக பல உலக சினிமா இயக்குனர்கள் லைவ் ரெக்கார்டிங் முறையை கையாண்டனர்.

 லைவ் ரெகார்டிங்

லைவ் ரெகார்டிங்

லைவ் ரெக்கார்டிங் முறையை முதன் முதலில் தமிழ் சினிமாவில் கொண்டு வந்த பெருமையும் கமலையே சேரும். தற்போது கமல் அவர்களின் திரைப்படங்களை ஞாபகப்படுத்தும் விதமாக புரியாத புதிர், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயகொடி ட்விட்டர் பக்கத்தில் கமல் குறித்து ஒரு அழகான பதிவை வெளியிட்டுள்ளார்.

 கமலின் சிறந்த படம்

கமலின் சிறந்த படம்

சன் லைப் சேனலில் ஒளிபரப்பான நாயகன் படத்தை பார்த்து மெய்மறந்து பிரம்பித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் சிறந்த 10 கிளாசிக் திரைப்படங்களை எடுத்தால் அதில் எட்டு திரைப்படங்கள் கமலஹாசன் அவர்களின் படங்களாகத்தான் இருக்கும் என்றும் பதிவிட்டிருந்தார். அவர் சொன்னது கிட்டதிட்ட உண்மைதான். அபூர்வ சகோதர்களைத் தொடங்கி குணா, தேவர் மகன், மகாநிதி, குதிப்புனல், இந்தியன், அவ்வை சண்முகி என்று இன்னும் பல படங்களின் எண்ணிக்கை நீண்டுக்கொண்டே செல்கிறது.

 பன்முகக்கலைஞன்

பன்முகக்கலைஞன்

நடிப்பைத் தவிர பல படங்களுக்கு, பாடல்களும் எழுதியிருக்கிறார். மேலும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலத்திலும் எழுபதிற்கும் மேற்பட்டப்ப பாடல்களைப் பாடியும் எழுதியும் உள்ளார். பலத் திறமைகளை தன்னுள்ளே வைத்துள்ள திறமையாளியான கமலஹாசன் அவர்கள் பரதநாட்டிய கலைஞராவார். சலங்கைஒலி படத்தின் மூலம் தன் நடனத்திறமையையும் நிரூபித்து இருப்பார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X