கோலிவுட் க்ளாசிக் - கமல் தேர்ந்தெடுத்த சிறந்த படங்கள்! -2

By Vignesh Selvaraj

சென்னை: india@70 - சுதந்திர தினத்தை முன்னிட்டு 70 வருடங்களை நினைவுகூரும் வகையில் நடிகர் கமலஹாசன் இந்தியாவின் சிறந்த 70 படங்களைத் தேர்வு செய்துள்ளார். அவற்றில் 20 தமிழ்த் திரைப்படங்களும் அடக்கம். தான் பார்த்த படங்களை மட்டுமே வைத்து இந்தப் பட்டியலைத் தேர்வு செய்ததாகவும் இதில் பலருக்கும் மாற்றுக்கருத்து இருக்கலாம் எனவும் டிஸ்க்ளைமர் போட்டிருக்கிறார் கமல். இவற்றில் பல அவர் பங்குபெற்ற படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அபூர்வ ராகங்கள் (1975)

அபூர்வ ராகங்கள் (1975)

இயக்கம் : கே.பாலச்சந்தர்

நடிகர்கள் : கமலஹாசன், சுந்தர்ராஜன், ஜெயசுதா, ஶ்ரீவித்யா மற்றும் பலர்.

சிறப்பு : கமலஹாசன் இந்தப் படத்தில் நடிப்பதற்காக மிருதங்கம் கற்றுக் கொண்டார். பிராந்திய மொழிகளுக்கான தேசிய விருது இந்தப் பட்த்திற்குக் கிடைத்தது. ரஜினிக்கு இந்தப் படத்தில் சின்ன வேடம்தான்..ஆனால் இந்த நபர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறாரே என திரும்பிப் பார்க்க வை த்த வேடம் அது.

மன்மத லீலை (1976)

மன்மத லீலை (1976)

இயக்கம் : கே.பாலச்சந்தர்

நடிகர்கள் : கமலஹாசன், ஹாலம் மற்றும் பலர்.

சிறப்பு : பெண்களின் மீது அதிகமான ஈர்ப்பு கொண்ட இளைஞராக கமலஹாசன் நடித்தார். தெலுங்கிலும் வெளியான இந்தப்படம் கமலுக்கு தெலுங்கு சினிமாவில் வழி ஏற்படுத்திக் கொடுத்த்து. ஒரிஜினல் தமிழ் வெர்சனை விட தெலுங்கு டப்பிங் வெர்சன் சிறப்பானதாக அமைந்தது.

16 வயதினிலே (1977)

16 வயதினிலே (1977)

இயக்கம் : பாரதிராஜா

நடிகர்கள் : கமலஹாசன், ரஜினிகாந்த், ஶ்ரீதேவி மற்றும் பலர்.

இசை : இளையராஜா

சிறப்பு : தமிழ்த் திரைப்பட வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய படம் இது. முழுவதுமாகக் கிராமத்திலேயே எடுக்கப்பட்ட படம். கமலின் ‘சப்பாணி' பாத்திரமும், ஶ்ரீதேவியின் ‘மயிலு' பாத்திரமும், ரஜினியின் ‘பரட்டை' ரோலும் ரசிகர்களால் என்றைக்கும் நினைவுகூரத்தக்கன.

அவர்கள் (1977)

அவர்கள் (1977)

இயக்கம் : கே.பாலச்சந்தர்

நடிகர்கள் : ரஜினிகாந்த், கமலஹாசன், சுஜாதா மற்றும் பலர்.

சிறப்பு : நாயகி, சூழ்நிலைகளால் காதலனை விட்டுவிட்டு வேறொருவரைத் திருமணம் செய்கிறாள். நாயகியின் காதலை அறிந்திருக்கும் கணவன் அவளைக் கொடுமைப்படுத்துகிறான். அவனிடமிருந்து விவாகரத்து பெற்றவள் காதலனைத் திருமணம் செய்யக் காத்திருக்கிறாள். அவர்களது வாழ்க்கையில் குறுக்கிடும் முன்னாள் கணவன், நாயகியை ஒருதலையாக்க் காதலிக்கும் இன்னொரு நண்பன்... கடைசியில் யார் யாரோடு சேர்ந்தார்கள் என்கிற சிக்கலான கதையை நேர்த்தியாக எடுத்திருப்பார் பாலச்சந்தர்.

சிகப்பு ரோஜாக்கள் (1978)

சிகப்பு ரோஜாக்கள் (1978)

இயக்கம் : பாரதிராஜா

நடிகர்கள் : கமலஹாசன், ஶ்ரீதேவி மற்றும் பலர்.

சிறப்பு : கிராமத்து ராஜாவாக இருந்த பாரதிராஜா சைக்கோ கதையை எடுத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படம் இது. இத்திரைப்படம் ஹிந்தியில் ‘ரெட் ரோஸ்' என மறு தயாரிப்பு செய்து வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


- தொடரும்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X