ஸ்பெஷல்ஸ்

By Staff

கமல்ஹாசன் என்னைச் சீண்டினால், அவரை களத்தில் சந்திக்க நானும் தயார் என்று புதிய தமிழகம் கட்சியின்பொதுச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார்.

தனது புதிய படத்தின் பெயர் சர்ச்சை குறித்து தனது பிறந்த நாள் விழாவின்போது கமல்ஹாசன் கடுமையானகருத்துக்களைக் கூறினார். படத்திற்கு புள்ளி ராஜா என்றா பெயர் வைக்க முடியும். கலைஞர்களை தமிழகஅரசியல்வாதிகள் மிரட்டுவதும், அச்சுறுத்துவம் கவலை தருவதாகவும் அவர் கடுமையாக சாடியிருந்தார்.

இதுகுறித்து டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், கமல்ஹாசன் என்னைசீண்டுகிறார். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. என்னை ஒருமையில் அழைத்துப் பேசியுள்ளார். என்னைசீண்டினால், நானும் அவரை களத்தில் சந்திக்கத் தயார்.

பெயரை மாற்றக் கோரினோம். மாற்றுவதாக அவரும் சொன்னார். அத்துடன் பிரச்சினை முடிந்து விட்டது. மீண்டும்என்னைச் சீண்டுவது சரியல்ல.

தேவர் மகன் படத்தின் இரண்டாவது பாகமாதத்தான் இதைக் கருதுகிறோம். அந்தப் படத்தில் இருந்தது போல ஜாதிமோதல்கள் இப்படத்தில் இடம் பெற்றால் நிச்சயம் படத்தைத் திரையிட விட மாட்டோம்.

கமல்ஹாசனுக்கு காசுதான் குறி. அவர் ஒரு சுயநலவாதி. அவரது கலை தமிழகத்திற்குத் தேவை இல்லை.இளைஞர்களின் வரவு தமிழக சினிமாவில் அதிகரித்து விட்டதால் முதியவரான கமல் போன்றவர்களுக்கு மோகம்குறைந்து விட்டது. அதனால்தான் சண்டியர்த்தனம் பேசுகிறார் என்றார் அவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X