ஸ்பெஷல்ஸ்
நடிகர் தனுஷைப் பார்க்கும்போது பொறாமையாக இருப்பதாக கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் ஆகிய படங்களின் வெற்றி விழா சென்னை காமராஜர்அரங்கத்தில் நடந்தது.
இதில் கமலஹாசன், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பாலுமகேந்திரா, நடிகர் பார்த்திபன்,இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு தனுஷையும், அவரது அண்ணன் இயக்குநர்செல்வராகவனையும் பாராட்டிப் பேசினார்கள்.
விழாவில் கமல் பேசுகையில், தனுஷைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது. அப்பா, அண்ணாஇருவரும் இயக்குநர்கள். அம்மா தயாரிப்பாளர். குடும்பமே சேர்ந்து இந்த விழாவை நடத்தியிருக்கிறது.
என் குடும்பம் சிதறிப் போயிருக்கலாம். ஆனாலும் எனக்குப் பெரிய குடும்பம் இருக்கிறது.
என்னுடைய பெரியப்பா சிவாஜி. அப்பா பாலச்சந்தர். சிவாஜி தம்பி பிரபுவுக்குச் சொல்லித் தராத விஷயங்களை எல்லாம்எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
காதல் கொண்டேன் கிளைமாக்ஸைப் பார்த்தபோது, குணா படத்தில் இதுபோல் வைத்திருக்கலாமே என்றுதோன்றியது. செல்வராகவன் உண்மையில் ஒரு நல்ல இயக்குநர். இந்தப் படத்தில் தனுஷ் ஒரு பெண்ணின்நெஞ்சில் கால் வைத்திருப்பது போன்ற போஸ்டர் என் நெஞ்சைக் கவர்ந்தது.
தமிழ் சினிமா இன்னும் கொஞ்ச நாளில் அழிந்து விடும் என்று சிலர் சொல்வதை நம்ப வேண்டாம்.அப்படிப்பட்டவர்களை தனுஷ் தன்னருகில் சேர்க்கக் கூடாது. அவருக்கு இன்னொரு பரிணாமம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்றார் கமல்.
ஜூன் மாதம் ரஜினி படம்:
வைரமுத்து பேசுகையில், இந்த விழா தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கையைத் தந்திருக்கிறது. கொஞ்சம் காதல்,கொஞ்சம் காமம், கொஞ்சம் விரக்தி, கொஞ்சம் இரக்கம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொடுத்ததால்தான் காதல் கொண்டேன் படம் வெற்றி பெற்றிருக்கிறது.
ரஜினி அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் புதிய படத்தைத் தொடங்குவார். அதற்கடுத்த வருடம் ஜனவரியில் படம்வெளியாகும் என்றார்.


Click it and Unblock the Notifications











