twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பல அண்டுகள் கழித்து அபிராமியை பாராட்டிய கமல். மகிழ்ச்சியில் வாயடைத்து போன அபிராமி

    |

    சென்னை: நடிகர் கமலஹாசன் சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்காக நீண்ட நேர நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார்.

    அதில் அவரது கேரியர் தொடங்கியதிலிருந்து இன்று வரை நடித்துள்ள படங்கள், உடன் பணிபுரிந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் பற்றி பல சுவாரசியமான தகவல்களை பேசியுள்ளார்.

    அவர் பேசியதில் சில முக்கியமான சுவாரசியமான தகவல்களை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

    கோமாவில் ஹாலிவுட் நடிகை..கைவிரித்த மருத்துவமனை..கவலையில் ரசிகர்கள்!கோமாவில் ஹாலிவுட் நடிகை..கைவிரித்த மருத்துவமனை..கவலையில் ரசிகர்கள்!

    பாலச்சந்தர் நாகேஷ்

    பாலச்சந்தர் நாகேஷ்

    துணை இயக்குநராக, துணை நடன இயக்குநராக பணிபுரிந்து கொண்டிருந்த கமல்ஹாசனை தனது படங்கள் மூலம் மீண்டும் நடிக்க கே.பாலச்சந்தர்.ஆரம்பத்தில் கமல்ஹாசன் நடிக்கும் பொழுது பலமுறை பாலசந்தரிடம் திட்டு வாங்கியுள்ளாராம். ஸ்பாட்டில் வைத்தே,"நாகேஷ மனசுல வச்சு கதை எழுதிட்டேன். இப்ப நா எதிர்பார்த்த மாதிரி நடிப்பு வரல" என்று கமல்ஹாசனை திட்டுவாராம். ஒரு முறை நாகேஷ் இல்லத்திற்கு சென்று உங்கள் பெயரை வைத்தே என்னை எப்போதும் திட்டிக் கொண்டிருக்கிறார். உங்கள் முகத்தை தலகாணியால் அமுக்கி கொன்று விடலாம் போல இருக்கிறது. தயவு செய்து நீங்கள் அவருடன் வந்து பணி புரியுங்கள் என்று சொல்ல அதுவரை ஏதோ ஒரு காரணத்தினால் பேசாமல் இருந்த நாகேஷும் பாலச்சந்தரும் மீண்டும் பணியாற்றத் துவங்கினார்களாம்.

    உண்மையான சப்பானி பாரதிராஜா

    உண்மையான சப்பானி பாரதிராஜா

    தமிழ் சினிமா டிரண்டையே மாற்றி அமைத்த 16 வயதினிலே திரைப்படத்தைப் பற்றி பேசியபோது, அந்தப் படத்தில் கதாநாயகன் என்று யாரும் கிடையாது. சப்பானி என்கிற கதாபாத்திரம் கூட, யாரேனும் கிண்டல் செய்தால் அது தன்னைத்தான் கிண்டல் செய்கிறார்கள் என்று தெரியாமல் சேர்ந்து சிரிக்க கூடிய ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். ஆனால் ஸ்பாட்டில் உண்மையான சப்பானியாக இருந்தது பாரதிராஜாதான். ஏனென்றால் சுற்றி முற்றி என்ன நடக்கிறது என்று கவனிக்காமல் முழுக்க முழுக்க படத்திலேயே கவனமாக இருப்பார். அவருக்கு கிடைக்க வேண்டிய சரியான மரியாதையை தமிழக மக்கள் அள்ளிக் கொடுத்து பாராட்டி தீர்த்து விட்டார்கள் என்று பாரதிராஜாவை வெகுவாக பாராட்டியுள்ளார்.

    விருமாண்டி

    விருமாண்டி

    விருமாண்டி திரைப்படம் எடுப்பதற்கு முன்னர் "மூ" என்கிற கதையைத்தான் கமல்ஹாசன் தயார் செய்து வைத்திருந்தாராம். தானும் இயக்குனர் மணிரத்தினமும் இயக்குனர் சங்கீத சீனிவாசராகவும் சேர்ந்து அந்தப் படத்தை இயக்கலாம் என்று மணிரத்தினத்தை அணுகினாராம். ஆனால் ஆயுத எழுத்து என்கிற கதையை அதே பாணியில் உருவாக்கியுள்ளதாக மணிரத்தினம் கூற, அதன் பின்னர் மூன்று கோணங்களில் சொல்ல வேண்டாம், இரண்டு கோணங்களில் சொல்லலாம் என்று உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் விருமாண்டி.

    அபிராமி

    அபிராமி

    அதில் கதாநாயகியாக நடித்த அபிராமிக்கு தமிழ் தாய் மொழி இல்லையாம். ஆனால் தெற்கத்தி பாஷையில் பிச்சி உதறி இருப்பார். அந்த ஊர் மக்களே நாங்கள் அவர்கள் வட்டார வழக்கை பேசுவதை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அவருடைய திறமையால்தான் விஸ்வரூபம் படத்தில் நடிகை பூஜாவிற்கு அபிராமியை டப்பிங் பேச வைத்தேன் என்று கூறியுள்ளார். அவர் பேசியதை பார்த்த அபிராமி மிகவும் பூரிப்படைந்து ஒரு பேட்டியளித்துள்ளார்.

    English summary
    Kamal praised Abhirami after many years and she was speechless with joy
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X