கமலுடே 'கதா'!
| Click here for more images |
கலைஞானி கமல்ஹாசனின் மகாநதி மற்றும் ஹே ராம் ஆகிய இரு படங்களின் திரைக் கதைகளும், மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
கமல்ஹாசனின் முத்திரைப் படங்களில் ஹே ராமுக்கும், மகாநதிக்கும் தனி இடம் உண்டு. இந்த இரு படங்களும் மிகப் பெரும் வெற்றியைப் பெற்ற படங்கள். இப்போது இந்தப் படங்களின் திரைக்கதைகள் தனி நூல்களாக மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
திருவனந்தபுரத்தில் இதுதொடர்பான விழா நடந்தது. அங்கு நடந்து வரும் உலக புத்தக விழாவில் நடந்த இந்த விழாவில் இரு நூல்களும் வெளியிடப்பட்டன.
'கமல்ஹாசண்ட ரண்டு திரக்கதகள்' என இந்த நூல்களுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. டிசி புக்ஸ் இதை வெளியிட்டுள்ளது. மலையாளத்தில் விஸ்வநாதன் மொழிபெயர்த்துள்ளார். மலையாளத்தில் முன்னணி எழுத்தாளரான டி.பத்மநாபன் நூலை வெளியிட்டார்.
புத்தகங்களை வெளியிட்ட பின்னர் கமல்ஹாசன் பேசுகையில், இந்த நாள் எனக்கு மிகப் பெரிய நாள். கேரள அறிவுஜீவிகள், எனது திரைக்கதைகளை அவர்களின் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது என்னைக் கவர்ந்து விட்டது.
எனது தசாவதாரம் திரைக்கதையையும் மலையாளத்தில் வெளியிட வேண்டும் என்று சிலர் கூறியுள்ளனர்.
நான் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. எனது திரைக்கதை நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைக்கும் நாளும் வரும் என்றார்.
நிகழ்ச்சியில் ஆசியாநெட் டிவி தலைவர் கே.பி.மோகன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











