twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகாநதிக்கும், தேவர்மகனுக்கும் பின்னே இப்படியொரு கதையா..? - கோலிவுட் கிளாசிக் -3

    By Vignesh Selvaraj
    |

    சென்னை: india@70 - சுதந்திர தினத்தை முன்னிட்டு 70 வருடங்களை நினைவுகூரும் வகையில் நடிகர் கமலஹாசன் இந்தியாவின் சிறந்த 70 படங்களைத் தேர்வு செய்துள்ளார். அவற்றில் 20 தமிழ்த் திரைப்படங்களும் அடக்கம். தான் பார்த்த படங்களை மட்டுமே வைத்து இந்தப் பட்டியலைத் தேர்வு செய்ததாகவும் இதில் பலருக்கும் மாற்றுக்கருத்து இருக்கலாம் எனவும் டிஸ்க்ளைமர் போட்டிருக்கிறார் கமல்.

    கமலுக்குப் பிடித்த கமல் படங்கள்

    மூன்றாம் பிறை (1982)

    மூன்றாம் பிறை (1982)

    இயக்கம் : பாலுமகேந்திரா

    நடிகர்கள் : கமலஹாசன், ஶ்ரீதேவி, சில்க் ஸ்மிதா மற்றும் பலர்.

    சிறப்பு : பாலுமகேந்திராவும், கமலஹாசனும் தங்களது ஸ்டைலை மாற்றிக்கொண்டு எடுத்த இந்தப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கமலுக்கும், சிறந்த ஒளிப்பதிவுக்காக பாலுமகேந்திராவுக்கும் தேசிய விருது கிடைத்தது.

    நாயகன் (1987)

    நாயகன் (1987)

    இயக்கம் : மணிரத்னம்

    நடிகர்கள் : கமலஹாசன், சரண்யா மற்றும் பலர்.

    சிறப்பு : மும்பையில் பெரிய தாதாவாக விளங்கிய வரதராஜ முதலியாரின் கதைதான் 'நாயகன்'. இந்திய அளவில் பெரிதாகப் பேசப்பட்ட இந்தப் படத்தில் நடித்ததற்காக கமலுக்கு தேசிய விருது கிடைத்தது. டைம் இதழின் சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலிலும் இந்தப் படம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. 'நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்ல' எனும் பிரபலமான வசனம் இடம்பெற்றது இந்தப் படத்தில்தான்.

    அபூர்வ சகோதரர்கள் (1989)

    அபூர்வ சகோதரர்கள் (1989)

    இயக்கம் : சிங்கீதம் ஶ்ரீனிவாசராவ்

    நடிகர்கள் : கமலஹாசன், கௌதமி, நாகேஷ், ஶ்ரீவித்யா மற்றும் பலர்.

    சிறப்பு : இந்தப்படத்தில் 'அப்பு' எனும் கேரக்டரில் கமல் நடித்த குள்ளமான பாத்திரம் மிகப் பிரபலமானது. கிராஃபிக்ஸ் டெக்னாலஜி இல்லாத காலத்தில் கமல் இந்த கேரக்டரில் எப்படி நடித்தார் என்பதே ஆச்சரியம்.

    தேவர் மகன் (1992)

    தேவர் மகன் (1992)

    இயக்கம் : பரதன்

    கதை : கமலஹாசன்

    நடிகர்கள் : கமலஹாசன், சிவாஜி கணேசன், கௌதமி, ரேவதி மற்றும் பலர்.

    சிறப்பு : நான்கு தேசிய விருதுகளை அள்ளிய இந்தப்படம் ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. 'தேவர் மகன்' கதையை கமல் வெறும் ஏழு நாட்களிலேயே எழுதி முடித்தாராம். தென்மாவட்டங்களின் சாதியக் கொடுமைகளைப் பேசிய படம் இது.

    மகாநதி (1994)

    மகாநதி (1994)

    இயக்கம் : சந்தானபாரதி

    நடிகர்கள் : கமலஹாசன், சுகன்யா மற்றும் பலர்.

    சிறப்பு : இந்தப் படமும் தேசிய விருதைப் பெற்றது. தனது மகளைக் கடத்த வீட்டில் வேலை செய்தவர்கள் திட்டமிட்டதாகவும், அதை யதேச்சையாகத் தான் அறிந்துகொண்டு காப்பாற்றிவிட்டதாகவும் அதனை முன்வைத்தே 'மகாநதி' கதையை எழுதியதாகவும் கமல் இப்போது தெரிவித்துள்ளார்.

    English summary
    Kamalhassan tells about the story of Mahanadhi film. He picks 70 best films released in independent india.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X