For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  உலகநாயகனின் கம்பீரமான தசாவதாரம்..வெளியாகி இன்றுடன் 12 வருஷம் ஆச்சு!

  |

  சென்னை : தமிழ்த் திரைபடத்துறை மட்டுமல்லாமல் இந்திய திரைபடத் துறையிலும் இவர் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவை அதில் ஒன்றுதான் தசாவதாரம். 10 அவதாரங்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு குரல் என அசத்திய உலக நாயகனின் தசாவதாரம் படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிறது.

  இந்த உலகில் ஆயிரம் அதிசயங்கள் நடந்தாலும் திரைத்துறையில் பல அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டு இருப்பவர் பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் நமக்கு கிடைத்த மிகப்பெரிய அதிசம்.

  திரைப்படங்களின் இப்போது என்னவெல்லாம் நடக்கிறதோ அதை பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்துச் சொல்லி இன்றைய காலகட்டத்திற்கு முன்னோடியாகத் திகழ்பவர்.

  அம்மனாக மட்டுமல்ல.. ஹாட்டாகவும் இத்தனை முறை அலறவிட்டுருக்காரு ரம்யா கிருஷ்ணன்!அம்மனாக மட்டுமல்ல.. ஹாட்டாகவும் இத்தனை முறை அலறவிட்டுருக்காரு ரம்யா கிருஷ்ணன்!

  கற்பனைக்கு எட்டாத

  கற்பனைக்கு எட்டாத

  தசாவதாரம் படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிறது. இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் வகையில் யாரும் சற்றும் யோசிக்காத கதைக்களத்தில் கமல்ஹாசன் மற்றும் கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவான இந்த படம் இருவேறு நூற்றாண்டில் நடக்கும் கதைகளை எடுத்துக்கொண்டு அதில் பல்வேறு கதாபாத்திரங்களை புகுத்தி கற்பனைக்கு சற்றும் எட்டாத வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதற்கு கதை மற்றும் திரைக்கதை கமல்ஹாசன் எழுதி இருக்கிறார் மேலும் இந்த படத்தை கேஎஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

  வித்தியாசமான கதாபாத்திரம்

  வித்தியாசமான கதாபாத்திரம்

  நடிகர்கள் பலரும் ஒரு படத்தில் ஒன்று அல்லது அதிகபட்சம் மூன்று நான்கு கதாபாத்திரங்கள் நடித்து வந்த வேளையில் கமல்ஹாசன் ஒரே படத்தில் 10 வித்தியாசமான கதாபாத்திரங்களில், வேறு வேறு மொழிகளைப் பேசக்கூடிய வெவ்வேறு இயல்புகளை உடைய ஒன்றுக்கு ஒன்று எந்த ஒரு சாயலும் இல்லாமல் அவர் சிறப்பாக செய்து முடித்திருப்பார்.

  கடவுள் பக்தன் முதல்

  கடவுள் பக்தன் முதல்

  கடவுள் பக்தன் ரங்கராஜ நம்பியில் ஆரம்பிக்கும் இந்த கதை, அடிக்கடி ஞாபகங்களை மறக்கும் குசும்பு பிடித்த கிருஷ்ணவேணி பாட்டி, இந்த வைரஸை பற்றி அறிய துருவித் துருவி கேள்வி கேட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சிபிஐ ஆபீசர் பல்ராம் நாயுடு, நாட்டு வளங்களைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் சமூகப் போராளி வின்சன்ட் பூவராகவன் , பயோ வார் என்ற மிகப்பெரிய பயங்கரத்தை ஏற்படுத்தக்கூடிய அந்த வைரஸ் நிறைந்த குப்பியை இந்தியாவை சார்ந்த விஞ்ஞானியிடம் இருப்பதை தேடி கண்டுபிடித்து அதை கைப்பற்ற நினைக்கும் அமெரிக்க வில்லன் கிறிஸ்டியன் ப்லிட்சர்.

  ஈடு இணை இல்லை

  ஈடு இணை இல்லை

  கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியுறும் மக்கள் கலைஞனாக வரும் பஞ்சாபி பாப் பாடகர் அவதார் சிங், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஜப்பானை சேர்ந்த தற்காப்பு கலை ஆசிரியர் சின்ஜென் நரஹாசி மற்றும் உயர்ந்த மனிதன் கலிபுல்லா கான் என்ன பத்து கதாபாத்திரங்களும் ஒன்றுக்கு ஒன்று எந்த ஒரு சாயலும் இல்லாமல் வாய்மொழி மற்றும் உடல் மொழிகளில் சிறு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாத வகையில் இந்த படத்தில் வரும் பத்து அவதாரங்களையும் நேர்த்தியாக நடித்துக் காட்டி இருப்பார்.

  தன்னை வருத்திக்கொண்டு

  தன்னை வருத்திக்கொண்டு

  தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களின் இயல்பு எவ்வாறாக இருக்க வேண்டுமோ, அதற்காக எந்தளவுக்கு வேண்டுமானாலும் தன்னை வருத்திக்கொண்டும், தயார்படுத்திக்கொண்டும் அந்த கதாபாத்திரங்களில் ஒன்றி நடிக்க கூடிய ஒரு மிகச்சிறந்த கலைஞன் உலகநாயகன் கமல்ஹாசன் இதற்கு எடுத்துக்காட்டாக இங்கு பல படங்களை சொல்லலாம்.

  மிகப்பெரிய மைல்கல்

  மிகப்பெரிய மைல்கல்

  பயோ வார் என்ற ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு அதனை சிறப்பாக கையாண்டு இருப்பார்கள் இந்த படத்தில் காமெடி, ஆக்சன், விருவிருப்பு, ஆச்சரியம் என எல்லாமே கலந்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிலும் ஒரு மிகப்பெரிய மைல்கல் ஆகும்.

  200 கோடி வசூல்

  200 கோடி வசூல்

  இவ்வாறு பல ஆச்சரியங்களை கொண்டு உருவானது தசாவதாரம். இந்தப்படம் 2008ஆம் ஆண்டு வெளியாகி திரையில் சக்கை போடு போட்டு வசூலை அள்ளி கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்தது. இவ்வாறு தனது ஒவ்வொரு படங்களிலும் புதுமையை புகுத்தி எதிர்கால கலைஞர்களுக்கு முன்னோடியா விளங்கும் கமல்ஹாசன் இந்திய சினிமாவில் எல்லோரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூலகம்.

  English summary
  Kamala Haasan's Dasavatharam got released On this day 12 years ago
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X