ஒட்டு மொத்த இந்திய சினிமாவின் பெருமை இவர் தான்.. உச்சி குளிர்ந்த ப்ரியா பவானி ஷங்கர்!
சென்னை: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி பெற்றவர்களில் நடிகை ப்ரியா பவானி சங்கருக்கு முக்கியமான பங்கு உண்டு.
ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளிவந்த எல்லா படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர், ஹோம்லி லுக்கில் மட்டும் இல்லாமல் மாடர்ன் உடைகளிலும் கலக்கக்கூடியவர் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

நல்ல வாய்ப்புகள்
நடிகை ப்ரியா பவானி சங்கர் நடித்த மான்ஸ்டார், களத்தில் சந்திப்போம், ஓமனப்பெண்ணே போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தற்போது இவரது நடிப்பில் யானை, திருச்சிற்றம்பலம், அகிலன், பொம்மை, ருத்ரன், பத்து தல போன்ற படங்கள் வெளிவர உள்ளன. கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார் ப்ரியா. தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ப்ரியா பவானி சங்கர், இந்நிலையில் இவர் நடிகர் கமல்ஹாசனை பற்றி பேசிய விஷயங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

வசூல் சாதனை
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம். உலகம் முழுவதும் விக்ரம் திரைப்படம் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில், விக்ரம் படக்குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக பல சினிமா பிரபலங்களும் கமல்ஹாசனையும், படக் குழுவினரையும் வாழ்த்தி புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

பல தோல்விகள்
கடந்த நான்கு ஆண்டுகளாக கமல்ஹாசனின் எந்த படமும் வெளிவராத நிலையில், இந்தப் படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக கமலஹாசன் விக்ரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு காரும், சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் போன்ற பல பரிசுகளை கொடுத்து வருகிறார். பல சினிமா நட்சத்திரங்கள் இவரின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். விக்ரம் பட வெற்றியை அனைவரும் கொண்டாடி வரும் நிலையில், நடிகை ப்ரியா பவானி சங்கர் கமலஹாசனை பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

பெருமையே இவர் தான்
நடிகை ப்ரியா பவானி சங்கர் கமல்ஹாசனைப் பற்றி கூறியிருப்பதாவது, "எனக்கு கமல் சாரை மிகவும் பிடிக்கும், தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் பெருமையே கமல் சார் தான், சூட்டிங் ஸ்பாட்டில் நாம் பதட்டமான சூழ்நிலையே வராது, அவரது கண்களை பார்த்தாலே போதும் அவர் கூற விரும்புவது நன்றாக புரிந்து விடும், கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே மாறி விடுவார், எத்தனை வருடம் அனுபவசாலியாக இருந்தாலும் பலரால் செய்ய முடியுமா என்று யோசிக்க கூடிய விஷயங்களை அவர் செய்து முடித்து விடுவார். இந்தியன் 2 படப்பிடிப்பில் நாங்கள் நடித்துக் கொண்டிருக்கும் போது, அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார். விக்ரம் படத்தை நான் திரையில் பார்க்கும்போது ஒரு பண்டிகை போல சந்தோஷமாக உணர்ந்தேன். மீண்டும் அவருடன் எப்பொழுது படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்பதை விட, அவரது படங்களை பார்ப்பது எனக்கு மிகவும் உற்சாகத்தை கொடுக்கிறது என்று மனம் விட்டு கமல்ஹாசனை புகழ்ந்துள்ளார் நடிகை ப்ரியா பவானி சங்கர்.


Click it and Unblock the Notifications











