கேரள அரசு நடத்திய கமல் பாராட்டு விழா-ஜெயா டிவியில் ஒளிபரப்பு

கமல்ஹாசனின் திரையுலக பொன்விழாவையொட்டி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், ஓணம் பண்டிகையின்போது கேரள அரசு பிரமாண்ட பாராட்டு விழாவை நடத்தி கெளரவித்தது.
இந்த பாராட்டு விழாவின் தொகுப்பினை ஜெயா டிவி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ஒளிபரப்புகிறது.
இந்த நிகழ்ச்சியோடு, கமல்ஹாசன் அளித்த சிறப்புப் பேட்டியும் ஒளிபரப்பாகவுள்ளது. மேலும், கமல்ஹாசனின் திரையுலக பயணம் குறித்து திரையுலகினர் அளிக்கும் பேட்டிகளும் இடம் பெறவுள்ளன.
களத்தூர் கண்ணம்மா முதல் மருதநாயகம் வரை என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











