For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஸ்பெஷல்ஸ்

  By Staff
  |

  சுபலட்சுமி, ரியா சென், ரீமா சென்களைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இருந்து கோடம்பாக்கம் வந்திறங்கியிருக்கிறது ஒரு அழகுப்பதுமை. பெயர் கமலினி முகர்ஜி.

  விளையாட வா என்ற படத்தில் நந்தாவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார்.

  கொல்கத்தாவில் கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் ஏஜென்சிகளால் விரட்டப்பட்ட இந்த பெங்காலி பியூட்டியை இந்தி சினிமாதத்தெடுத்துக் கொண்டது.

  ரேவதி இயக்கிய பிர் மிலேங்கே படத்தில் ஹீரோயின் ஷில்பா ஷெட்டிக்கு தங்கை ரோலில் நடித்தார். அடுத்தடுத்தும் வாய்ப்புக்கள்வந்தாலும் இந்தியை விட்டு ஓடி வருவதிலேயே அதிகம் ஆர்வம் காட்டியிருக்கிறார் கமலினி.

  காரணம், இந்தி சினிமா ஆசாமிகளின் ரோதனை தான். சான்ஸ் உண்டு.. ஆனால்.. என்று அவர்கள் இழுத்த இழுப்பை தாங்க மாட்டாமல்தென்னகத்தின் பக்கம் தென்றலாய் கிளம்பி வந்துவிட்டார்.

  தெலுங்கில் ஆனந்த என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மிக நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பார்க்க மிக அமைதியாகஇருந்தாலும் கவர்ச்சி விஷயத்தில் கட்டுப்பாடெல்லாம் இல்லை. காமெராவுக்கு உறுத்தாக அளவுக்கு அழகைக் காட்டிவிடுகிறார்.

  தெலுங்கு சினிமாவில் எக்ஸ்போஸ் செய்யாம ஓட்ட முடியாதே... சொல்லிச் சிரிக்கிறார்.

  தெலுங்கில் அடுத்து பவன் கல்யாணுடன் உள்ளிட்ட சில ஹீரோக்களுடன் நடிக்கிறார். மேலும் பலரும் அட்வான்ஸ்களுடன் வந்தாலும்,கமலினியின் கண்கள் எல்லாம் கோலிவுட் பக்கமாகவே மேய்கிறது.

  காரணம் கேட்டால், இந்தியில் ஒரு வகை தொல்லை என்றால், தெலுங்கிலோ சும்மா மழை டான்ஸ் ஆட விட்டுவிட்டு ஹீரோயினைவில்லன் கையால் கொன்றுவிடுகிறார்கள் அல்லது ஹீரோவுடன் கடைசி ரீல் வரை இடுப்பையும் அவயங்ககைளையும் கண்டமாதிரி ஆட்டவைக்கிறார்கள்.


  கதை சொல்லும்போதே கவர்ச்சியைத் தான் பிரதமானப்படுத்துகிறார்கள்.

  ஆனால், தமிழில் என்ன மாதிரியான அழகான முயற்சிகள்... ஆட்டோகிராப், பிதாமகன்.. இவையெல்லாம் என்ன அட்டகாசமானபடைப்புகள்.. சிலாகிக்கிறார் கமலினி. கூடவே சூர்யா, அஜீத், விஜய், பிரசாந்த், ரவி... என அழகான ஹீரோக்களுக்கும் பஞ்சமில்லை..கண்ணடித்துச் சொல்லிச் சிரிக்கிறார், கமலினி.

  நல்ல ஊதியம் தருகிறார்கள்.. இதனால் தெலுங்கை விட மாட்டேன். அதே நேரத்தில் தமிழ் தான் என் இலக்கு. அதற்காக முயன்றேன்,இப்போது தான் முதல் சான்ஸ் அடித்திருக்கிறது.. சொல்லும்போதே சந்தோஷம்.

  தமிழில் இவர் அறிமுகமாகும் படம் விளையாட வா. ஜாஸ்மின் தியேட்டர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் ஹீரோ நந்தா.

  கமலினியைத் தவிர இதில் காயத்ரி ஜெயராமும் இருக்கிறாராம். மேலும் சன் டிவி வணக்கம் தமிழகம் புகழ் உமா பத்மநாபன்உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

  ஆதித்யன் இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி படத்தையும் இயக்கப் போவது ரவிசங்கர். சூப்பர் குட் பிலிம்சுக்காகவருஷமெல்லாம் வசந்தம் படத்தை இயக்கியவர். கடந்த வாரம் சூட்டிங் ஸ்டார்ட் ஆகிவிட்டது.

  நடிப்பிலும் நடன அசைவுகளிலும் கலக்குகிறாராம் கமலினி, யூனிட் ஆட்கள் சொல்கிறார்கள்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X