»   »  கனகா திரும்பி வந்தார்! கரகாட்ட கண்ணழகி கனகா மீண்டும் சென்னையில் தலை காட்டத் தொடங்கியுள்ளார். கரகாட்டக்காரன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கோலிவுட்டில் பெரிய ரவுண்டு வந்தவர் கனகா. அந்தக் காலநாயகர்களின் விருப்ப நாயகியாக கொடி நாட்டிய தேவிகாவின் வாரிசான கனகா, கரகாட்டக்காரன் படத்திற்குப் பிறகுஏராளமான படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவரது திரையுலக வாழ்க்கையின் உச்சகட்டமாக, ரஜினியுடன் அதிசயப் பிறவி படத்தில் ஜோடி சேர்ந்து ரஜினி ரசிகர்களின்அண்ணியாக மாறினார். அதன் பிறகு அவருக்கு ஏறுமுகம்தான். விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என முன்னணி நாயகர்களுடன் ஒரு ஆட்டம் போட்டார். கமலைத் தவிர மற்ற அனைத்துஹீரோக்களுடனும் நடித்து முடித்து விட்ட கனகாவுக்கு புதுமுகங்களின் வரவால் வாய்ப்புகள் குறைந்து போயின. பெரிய நடிகர்களுடன் நடித்து வந்த அவர், விவேக் போன்ற காமடி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் காலத்தைக் கடத்திவந்தார். இடையில் மலையாளக் கரையோரம் ஒதுங்கி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துஅங்கும் ஒரு ரவுண்டு வந்தார்.இந்த நேரத்தில், தேவிகாவின் திடீர் மரணம் கனகாவை உலுக்கி விட்டது. தாயை இழந்து தனி மரமான கனகா, நடிப்பதைநிறுத்தி விட்டார். வீட்டோடு முடங்கிப் போனார். மன ரீதியாக அவர் மிகவும் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூட செய்திகள்வெளியாகின. உடல் ரீதியாகவும் அவர் துவண்டு போயிருந்தார். அதன் பிறகு கனகாவைப் பற்றி ஒரு செய்தியும் இல்லை. அவர் எங்குஇருக்கிறார், சென்னையில் இருக்கிறாரா அல்லது வேறு எங்காவது போய் விட்டாரா என்பது குறித்துத் தெரியாமல் இருந்துவந்தது. இப்போது திடீரென கனகா வெளியுலகில் தலை காட்டத் தொடங்கியுள்ளார். குண்டடித்துப் போன உடலை கொஞ்சம் குறைத்துமெலிதாகியுள்ள கனகா, ஆந்திராவைச் சேர்ந்த தனது தாய் வழி உறவினருடன் வலம் வரத் தொடங்கியுள்ளார். ஆந்திராவாலாவை தனது உறவினர் அதாவது மாமா முறை என்று கனகா அறிமுகப்படுத்துகிறார். நல்ல வாய்ப்புகள்கிடைத்தால் சினிமாவில் நடிக்கத் தயார் என்றும் தனக்கு நெருங்கிய சினிமாக்காரர்களிடம் கனகா கூறி வருகிறாராம். கனகாவின் அப்பா தேவதாஸ் மதுரை மேலூர்க்காரர் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. தேவிகா அவரை விவகாரத்து செய்தபின்,சொந்த ஊருக்குச் சென்று விவசாயம் பார்த்து வருகிறார் தேவதாஸ். அவருக்கும் கனகாவுக்கும் சற்றும் தொடர்பு கிடையாது.

கனகா திரும்பி வந்தார்! கரகாட்ட கண்ணழகி கனகா மீண்டும் சென்னையில் தலை காட்டத் தொடங்கியுள்ளார். கரகாட்டக்காரன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கோலிவுட்டில் பெரிய ரவுண்டு வந்தவர் கனகா. அந்தக் காலநாயகர்களின் விருப்ப நாயகியாக கொடி நாட்டிய தேவிகாவின் வாரிசான கனகா, கரகாட்டக்காரன் படத்திற்குப் பிறகுஏராளமான படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவரது திரையுலக வாழ்க்கையின் உச்சகட்டமாக, ரஜினியுடன் அதிசயப் பிறவி படத்தில் ஜோடி சேர்ந்து ரஜினி ரசிகர்களின்அண்ணியாக மாறினார். அதன் பிறகு அவருக்கு ஏறுமுகம்தான். விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என முன்னணி நாயகர்களுடன் ஒரு ஆட்டம் போட்டார். கமலைத் தவிர மற்ற அனைத்துஹீரோக்களுடனும் நடித்து முடித்து விட்ட கனகாவுக்கு புதுமுகங்களின் வரவால் வாய்ப்புகள் குறைந்து போயின. பெரிய நடிகர்களுடன் நடித்து வந்த அவர், விவேக் போன்ற காமடி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் காலத்தைக் கடத்திவந்தார். இடையில் மலையாளக் கரையோரம் ஒதுங்கி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துஅங்கும் ஒரு ரவுண்டு வந்தார்.இந்த நேரத்தில், தேவிகாவின் திடீர் மரணம் கனகாவை உலுக்கி விட்டது. தாயை இழந்து தனி மரமான கனகா, நடிப்பதைநிறுத்தி விட்டார். வீட்டோடு முடங்கிப் போனார். மன ரீதியாக அவர் மிகவும் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூட செய்திகள்வெளியாகின. உடல் ரீதியாகவும் அவர் துவண்டு போயிருந்தார். அதன் பிறகு கனகாவைப் பற்றி ஒரு செய்தியும் இல்லை. அவர் எங்குஇருக்கிறார், சென்னையில் இருக்கிறாரா அல்லது வேறு எங்காவது போய் விட்டாரா என்பது குறித்துத் தெரியாமல் இருந்துவந்தது. இப்போது திடீரென கனகா வெளியுலகில் தலை காட்டத் தொடங்கியுள்ளார். குண்டடித்துப் போன உடலை கொஞ்சம் குறைத்துமெலிதாகியுள்ள கனகா, ஆந்திராவைச் சேர்ந்த தனது தாய் வழி உறவினருடன் வலம் வரத் தொடங்கியுள்ளார். ஆந்திராவாலாவை தனது உறவினர் அதாவது மாமா முறை என்று கனகா அறிமுகப்படுத்துகிறார். நல்ல வாய்ப்புகள்கிடைத்தால் சினிமாவில் நடிக்கத் தயார் என்றும் தனக்கு நெருங்கிய சினிமாக்காரர்களிடம் கனகா கூறி வருகிறாராம். கனகாவின் அப்பா தேவதாஸ் மதுரை மேலூர்க்காரர் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. தேவிகா அவரை விவகாரத்து செய்தபின்,சொந்த ஊருக்குச் சென்று விவசாயம் பார்த்து வருகிறார் தேவதாஸ். அவருக்கும் கனகாவுக்கும் சற்றும் தொடர்பு கிடையாது.

Subscribe to Oneindia Tamil

கரகாட்ட கண்ணழகி கனகா மீண்டும் சென்னையில் தலை காட்டத் தொடங்கியுள்ளார்.

கரகாட்டக்காரன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கோலிவுட்டில் பெரிய ரவுண்டு வந்தவர் கனகா. அந்தக் காலநாயகர்களின் விருப்ப நாயகியாக கொடி நாட்டிய தேவிகாவின் வாரிசான கனகா, கரகாட்டக்காரன் படத்திற்குப் பிறகுஏராளமான படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அவரது திரையுலக வாழ்க்கையின் உச்சகட்டமாக, ரஜினியுடன் அதிசயப் பிறவி படத்தில் ஜோடி சேர்ந்து ரஜினி ரசிகர்களின்அண்ணியாக மாறினார். அதன் பிறகு அவருக்கு ஏறுமுகம்தான்.

விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என முன்னணி நாயகர்களுடன் ஒரு ஆட்டம் போட்டார். கமலைத் தவிர மற்ற அனைத்துஹீரோக்களுடனும் நடித்து முடித்து விட்ட கனகாவுக்கு புதுமுகங்களின் வரவால் வாய்ப்புகள் குறைந்து போயின.

பெரிய நடிகர்களுடன் நடித்து வந்த அவர், விவேக் போன்ற காமடி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் காலத்தைக் கடத்திவந்தார். இடையில் மலையாளக் கரையோரம் ஒதுங்கி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துஅங்கும் ஒரு ரவுண்டு வந்தார்.

இந்த நேரத்தில், தேவிகாவின் திடீர் மரணம் கனகாவை உலுக்கி விட்டது. தாயை இழந்து தனி மரமான கனகா, நடிப்பதைநிறுத்தி விட்டார். வீட்டோடு முடங்கிப் போனார்.

மன ரீதியாக அவர் மிகவும் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூட செய்திகள்வெளியாகின.


உடல் ரீதியாகவும் அவர் துவண்டு போயிருந்தார். அதன் பிறகு கனகாவைப் பற்றி ஒரு செய்தியும் இல்லை. அவர் எங்குஇருக்கிறார், சென்னையில் இருக்கிறாரா அல்லது வேறு எங்காவது போய் விட்டாரா என்பது குறித்துத் தெரியாமல் இருந்துவந்தது.

இப்போது திடீரென கனகா வெளியுலகில் தலை காட்டத் தொடங்கியுள்ளார். குண்டடித்துப் போன உடலை கொஞ்சம் குறைத்துமெலிதாகியுள்ள கனகா, ஆந்திராவைச் சேர்ந்த தனது தாய் வழி உறவினருடன் வலம் வரத் தொடங்கியுள்ளார்.

ஆந்திராவாலாவை தனது உறவினர் அதாவது மாமா முறை என்று கனகா அறிமுகப்படுத்துகிறார். நல்ல வாய்ப்புகள்கிடைத்தால் சினிமாவில் நடிக்கத் தயார் என்றும் தனக்கு நெருங்கிய சினிமாக்காரர்களிடம் கனகா கூறி வருகிறாராம்.

கனகாவின் அப்பா தேவதாஸ் மதுரை மேலூர்க்காரர் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. தேவிகா அவரை விவகாரத்து செய்தபின்,சொந்த ஊருக்குச் சென்று விவசாயம் பார்த்து வருகிறார் தேவதாஸ்.

அவருக்கும் கனகாவுக்கும் சற்றும் தொடர்பு கிடையாது.

Read more about: kanaga returns to kollywood

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil