»   »  மதுரை மல்லி கனிகா!

மதுரை மல்லி கனிகா!

Subscribe to Oneindia Tamil

பிட்ஸ் பிலானியில் போய் என்ஜினியரிங் படித்தாலும், நாகரீக தொட்டிலில் ஆடிக்கொண்டிருந்தாலும் கூட, கனிகா இன்னும் மதுரை மண்ணை மறக்காமல் தான்இருக்கிறார்.

குல்கந்து அழகு, குதுப்மினார் உயரம் என படு ஷோக்காக இருக்கும் கனிகாவுக்குசொந்த ஊர் மதுரை. திருப்பரங்குன்றத்தைத் தாண்டி கொஞ்ச தூரம் போனால் வரும்திருநகர்தான் கனிகா பிறந்த ஊராம்.

அப்பாவுக்கு வேளை வெளி மாநிலங்களிலிலேயே இருந்ததால் கனிகாவும்குடும்பத்தோடு ஊர் ஊராக போக வேண்டியதாயிற்றாம். படித்தது ஒரு ஊர், வளர்ந்ததுஒரு ஊர், இப்போது மீண்டும் படிப்பது இன்னொரு ஊர் என அசல் இந்திய நாரியாகமாறிப் போயுள்ளார் கனிகா.

இப்போது ராஜஸ்தான் மாநிலம் பிலானியில் உள்ள பிட்ஸ் கல்வி நிறுவனத்தில்என்ஜினியரிங் படித்து வருகிறார் கனிகா. படிப்புக்கு இடையேதான் வரலாறு படத்தில்நடித்தாராம். அப்படியே தங்க வேட்டை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார்.தங்க வேட்டை இப்போது முடிந்து விட்டதால் கனிகாவின் டிவி வேலையும் முடிந்துவிட்டது.

வரலாறுக்குப் பிறகு நிறையப் படங்கள் வந்ததாம். இருந்தும் படிப்பு பாழாய்ப் போய்விடக் கூடாதே என்பதற்காக சினிமாவுக்கு சின்னதாக பிரேக் விட்டுள்ளாராம்.

சொந்த ஊரு மதுரைங்கிறீங்களே, சாயலைப் பார்த்தா தெரியலையே என்றுகனிகாவிடம் கேட்டால், அச்சு அசல் மதுரைக்கார குருவம்மா கணக்கில் பேசிக்காட்டி அசத்துவார்.

மதுரையில் 1999 வரை இருந்தாராம் கனிகா. அதன் பிறகு பிலானியில் படிக்கும்வாய்ப்பு வரவே கிளம்பி விட்டார்களாம்.

மதுரையில் நான் இருந்த நாட்களை மறக்கவே முடியாது என்று நினைவுகளை மலரவிடும் கனிகா, குடும்பத்தோடு சனிக்கிழமைகளில் திருமோகூர் சக்கராத்தாழ்வார்கோவிலுக்குப் போய் விடுவாராம்.

காரைப் போட்டுக் கொண்டு சக்கரத்தாழ்வாவை தரிசனம் செய்து விட்டுத் திரும்பும்வழியில், எங்காவது வயக்காட்டையொட்டி காரை நிறுத்தி விட்டு குடும்பத்தோடு,கையோடு கொண்டு வந்த புளியோதரை உள்ளிட்ட ஐட்டங்களை ஒரு கைபார்ப்பார்களாம்.

இதெல்லாம் இன்னும் எனக்கு பசுமையாக ஞாபகத்தில் இருக்கிறது என்கிறார் இந்தஅழகு மல்லி. இப்பவும் கூட எப்பவாவது மதுரைக்கு போவாராம் கனிகா. அவரோடஉறவினர்கள் எல்லாம் மதுரை பக்கம்தான் இருக்கிறார்களாம்.

ஊர் ஞாபகம் வந்தால் சென்னைக்கு அருகே உள்ள கிராமங்கள் பக்கம் காரை எடுத்துக்கொண்டு ஒரு ரவுண்டு அடித்து விட்டு வருவாராம் கனிகா.

(ஊர்) பாசக்கார பொண்ணுப்பா!

Read more about: kaniga a madurai girl

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil