கனிகாவின் வளர்ச்சி!!

By Staff

பைவ் ஸ்டார் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான கனிகா, ரொம்ப வேகமாக முன்னேறி டப்பிங் ஆர்டிஸ்ட்ஆகிவிட்டார்.

இந்தியாவின் மிகச் சிறந்த தொழில்கல்வி நிறுவனமான பிஐடிஎஸ் பிலானியின் என்ஜினியரிங் படிப்பை முடித்தவர் கனிகா.கேம்பஸிலேயே நல்ல நிறுவனங்களில் வேலைக்குச் சேர அவருககு வாய்ப்புக்கள் வந்தபோதும், அதையெல்லாம் விட்டுவிட்டுசினிமாவுக்குப் போவது என்று அவர் முடிவெடுத்தார்.

சென்னையில் ஒரு அழகிப் போட்டியில் பங்கேற்று மிஸ் சென்னையாகத் தேர்வு செய்யப்பட்டவுடனேயே அவருக்கு சினிமா ஆசைவந்துவிட்டது. இதனால் உயர் கல்வி படிக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு மாடலிங்குக்குள் நுழைந்துவிட்டார்.

அடிப்படையில் கேரளத்தைச் சேர்ந்தவர் கனிகா. ஆனால், வளர்ந்தது எல்லாமே சென்னையில் என்பதால் அழகாகவே தமிழ்பேசும் திறன் கொண்டவர். கனிகாவைவிட அவரது குரல் ரொம்ப அழகு. ஆளை மயக்கும் குரல் என்பார்களே அது மாதிரி ஒருஸ்வீட் வாய்ஸ் கொண்டவர்.

இதனால், மாடலிங் செய்தபடியே சில படங்களில் ஹீரோயின்களுக்கு பின்னணி வாய்சும் கொடுத்தார்.

இந் நிலையில் தான் மணிரத்னம் தயாரிப்பில் அவரது அசிஸ்டென்ட் சுசிகணேசன் இயக்கிய பைவ் ஸ்டார் படத்தில் நடிக்கவாய்ப்பு வந்தபோது, அதை மணிரத்னம் படமாகவே பாவித்து, பூரித்துப் போய் நடித்தார்.

படம் ஓரளவுக்கு ஓடியது. கனிகாவின் நடிப்புக்கும் மரியாதை கிடைத்தது. ஆனால், வாய்ப்பு தான் கிடைக்கவில்லை.நடிகையானதால் டப்பிங் குரல் கொடுக்கும் வேலையை மூட்டி கட்டி வைத்தார் கனிகா.

தமிழில் வாய்ப்பில்லாததால் கன்னடம், தெலுங்கு, சொந்த மொழியான மலையாளம் என சுற்றிச் சுற்றி வந்து சிறிய ரோல்களில்நடித்தார். தெலுங்கில் வழக்கம்போல் இவரையும் உருவி எடுத்துவிட்டனர். அப்படியே கவர்ச்சியாக சில படங்களில் நடித்தார்.

பின்னர் சேரனின் ஆட்டோகிராப்பில் கடைசியில் வந்தாலும் படம் பார்ப்போர் மனதில் கச்சிதமாக இடம் பிடிக்கும் ஒரு ரோல்கிடைத்தது கனிகாவுக்கு. அதில் நன்றாகவே நடித்தார். மனதிலும் இடம் பிடித்தார். ஆனால், தயாரிப்பாளர்கள் மனதில் அல்ல.

இதனால் திரும்பவும் படமில்லாமல் தவித்தார். இந் நிலையில் தான் ஒரு காலை இழந்த குட்டியை வைத்து உருவாக்கப்பட்டடான்சர் படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அந்தப் படம் போட்ட காசுக்கு பெரும் இழப்பைத்தந்துவிட்டது.

அதே போல இவர் நடித்த எதிரி படமும் எதிர்பார்த்த ரிசல்ட் தரவில்லை. எனவே, கனிகாவை கோடம்பாக்கம் புறந்தள்ளிவிட,ஐடியலாக வீட்டில் உட்காரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மீண்டும் தனது டப்பிங் குரல் கொடுக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார். சச்சின் படத்தில் ஜெனலியா என்றபெயரில் நடித்த பாய்ஸ் ஹரிணி ஹஸ்கி வாய்சில் கொஞ்சுவாரே அது கனிகாவின் குரல் தான்.

அதே போல அந்நியனில் சதாவுக்கும் கனிகாவைத் தான் வாய்ஸ் தர புக் செய்திருந்தார் இயக்குனர் ஷங்கர். ஆனால், என்னநினைத்தாரே கனிகாவைத் தூக்கிவிட்டு வேறு ஒருவரைப் போட்டுவிட்டார்.

இருந்தாலும் வேறு சில படங்களில் பின்னணி பேசிக் கொண்டிருக்கும் கனிகா, அப்படியே தனது சினிமா வாய்ப்புத் தேடலையும்தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

இப்போது அவர் சான்ஸ் தேடுவது, தமிழில் அல்ல. தெலுங்கிலும் மலையாளத்திலும் தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X