அந்த ஜாதியில் இருந்து நடிக்க வந்த ஒரே பெண் நான் .. தம்பட்டம் அடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கு எதிர்ப்பு

பெங்களூரு: கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் கிடைத்த பிரபலம் மற்றும் வாய்ப்புகளால் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கன்னட திரையுலகில் இருந்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினாலும் அதன் பின்னர் அவருக்கு, தெலுங்கு திரையுலகில் வாய்ப்பு கிடைத்ததும் கன்னட சினிமாவை அலட்சியமாகவும் மட்டம் தட்டுவது போலவும் நடந்து கொள்கிறார் என விமர்சிக்கப்படுகிறார். இதனால் பலமுறை கன்னடர்களை கோபப்படுத்தி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில், ' கொடவா சமூகத்தில் இருந்து நடிக்க வந்த முதல் பெண் நான் தான் என பெருமிதமாக கூறினார். ரஷ்மிகாவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கூர்க்கில் இருந்து இதுவரை பலரும் திரைப்படத் துறையில் ஜொலித்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி வருகிறார்கள். எதிர்ப்புகள் கிளம்பிய பின்னரும், ராஷ்மிகா மந்தனா தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கவோ அல்லது விளக்கம் அளிக்கவோ இல்லை. இந்த நிலையில், கொடுவா சமூகத்தை சேர்ந்த நடிகை பவி பூவப்பா இது குறித்து பேசியுள்ளார்.

மாடலிங் துறையில் ஜொலித்து, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து கன்னடர்களின் கவனத்தை ஈர்த்த பவி பூவப்பா. இவர் கன்னட யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ராஷ்மிகா மந்தனா குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், "கொடுவா சமூகத்தில் இருந்து நடிகை பிரேமா தொடங்கி பலர் இதுவரை திரைப்படத் துறைக்கு வந்து சாதனை படைத்துள்ளனர். ராஷ்மிகா மந்தனா மட்டும் அல்ல" என்று கூறியுள்ளார்.

Kannada Actress Pavi Poovappa Slams Rashmika Mandhanna Comment About Kodava Community Female Actors
Photo Credit:

பவி பூவப்பா: மேலும் அந்த பேட்டியில், இது ராஷ்மிகா மந்தனாவின் PR குழுவின் யோசனையாக இருக்கலாம் அல்லது ராஷ்மிகா மந்தனா பேசும் முறையே அப்படித்தான் இருக்கும். அதற்கு ராஷ்மிகா மந்தனாவின் பல பழைய பேட்டிகளே சாட்சி" என்று குறிப்பிட்டுள்ளார் பவி பூவப்பா. ராஷ்மிகா மந்தனா ஏதோ பேசப் போய், ஏதோ பேசி இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பேசிக்க மாட்டங்களாம்: அதே நேரத்தில், "நாங்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அடிக்கடி திருமண விழாக்களில் சந்திப்போம். ஆனால் அவர் என்னிடம் பேசுவதில்லை. நானும் அவரிடம் பேசுவதில்லை" என்று பவி பூவப்பா தெரிவித்துள்ளார். ராஷ்மிகா மந்தனாவுக்கு எதிர்ப்பு கிளம்பியதை அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் என இணையதள வாசிகள் தெரிவித்து வருகிறார்கள்.

Kannada Actress Pavi Poovappa Slams Rashmika Mandhanna Comment About Kodava Community Female Actors
Photo Credit:

ராஷ்மிகா மந்தனா: ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் இருந்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினாலும், தெலுங்கு சினிமாவில் கிடைத்த வரவேற்பால் கன்னட சினிமா பக்கம் எட்டிப்பார்ப்பதே இல்லை. தெலுங்கில் அவருக்கு கிடைத்த வரவேற்பு அவருக்கு இந்தி சினிமா வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்தது. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் குபேரா. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாக்கப்பட்டு, அதன் பின்னர், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. வணிக ரீதியாக படம் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் பாக்ஸ் ஆபீஸில் மட்டும் சுமார் 1800 கோடிகள் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா தற்போது ஹீரோயின் சென்ட்ரிக் படங்களிலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X