Kannappa Box Office Prediction: 1.15 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை.. முதல் நாள் கண்ணப்பா வசூல் கணிப்பு!

ஹைதராபாத்: நடிகர் மோகன் பாபு தயாரிப்பில் அவரது மகன் விஷ்ணு மஞ்சு நடித்துள்ள கண்ணப்பா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. படத்துக்கு வெளிநாடுகளில் வெளியான ப்ரீமியர் மற்றும் டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தனுஷின் குபேரா படம் கடந்த வாரம் வெளியாகி 100 கோடி வசூல் ஈட்டிய நிலையில், இந்த வாரம் கண்ணப்பா படமும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாதக் கடைசி என்றாலும், கண்ணப்பா படத்தை பார்க்க பக்தர்களும் ரசிகர்களும் அலைமோதி வருவதாக நடிகர் விஷ்ணு மஞ்சு தனது ஆனந்தத்தை ட்வீட் போட்டு வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 1.15 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாகவும் மேலும், பல ரசிகர்கள் ஆஃப்லைனிலும் தியேட்டர்களில் டிக்கெட்டுகளை புக் செய்து இன்று படம் பார்ப்பார்கள் என்றும் பதிவிட்டு இருக்கிறார்.

Kannappa Day 1 Box Office Prediction Vishnu Manchu movie will overtake Kubera Day 1 Box Office
Photo Credit:

பிரபாஸ், அக்‌ஷய் குமார், மோகன்லால், சரத்குமார் என பான் இந்தியா ஸ்டார்கள் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், பல இடங்களிலும் படம் பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மற்ற மாநிலங்களில் கண்ணப்பா படத்துக்கு டஃப் போட்டியும் நிலவி வருவதால் முதல் நாள் வசூல் எப்படி இருக்கும் என்பது தொடர்பான கணிப்புகளை இங்கே காணலாம் வாங்க..

150 கோடி பட்ஜெட்: தெலுங்கு நடிகர் மோகன் பாபு தனது மகன் விஷ்ணு மஞ்சுவை வைத்து தயாரித்துள்ள கண்ணப்பா படத்தின் மொத்த பட்ஜெட் 150 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், படத்தை புரமோட் செய்ய செய்யப்பட்ட விளம்பரங்கள், சிஜி வொர்க் என அதிகப்படியாக 180 கோடி வரை செலவு ஆகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கண்ணப்பா படத்தை பெரியளவில் கொடுக்க வேண்டும் என்றே மோகன் பாபு மற்றும் விஷ்ணு மஞ்சு பல முயற்சிகளை பார்த்துள்ளனர்.

காசு வாங்காத பிரபாஸ், மோகன்லால்: இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க நடிகர்கள் பிரபாஸ் மற்றும் மோகன்லால் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின. சில பேட்டிகளில் விஷ்ணு மஞ்சுவும் முன்னணி நடிகர்களின் அன்பை பார்த்து மெய்சிலிர்த்துப் போனதாகவும் அனைத்தும் சிவனின் அருள் தான் என்றும் கூறியிருந்தார். சிவனாக நடித்த பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு மட்டும் 6 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்?: கண்ணப்பா படத்திற்கு அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் சிறப்பாக இருந்ததாகவும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1.15 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியிருப்பதாகவும் விஷ்ணு மஞ்சு பதிவிட்டுள்ளார். ஓவர்சீஸ் மற்றும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் கண்ணப்பா வெளியாகி உள்ள நிலையில், முதல் நாள் வசூல் அதிகப்படியாக 30 கோடி ரூபாய் ஓபனிங் வரும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. குபேரா, சித்தாரே ஜமீன் பர் உள்ளிட்ட படங்களை விட பெரிய ஓபனிங்கை இந்த படம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணப்பா கதையை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்றும் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X