ரஜினிகாந்த் மகள் சந்தித்த அதே பிரச்னை.. மோகன் பாபு மகனின் ‘கண்ணப்பா’வுக்கு வந்த சிக்கல்.. என்ன ஆச்சு?

ஹைதராபாத்: ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகருமான மோகன் பாபு தயாரிப்பில் அவரது மகன் விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டா பொருட்செலவில் உருவான கண்ணப்பா படத்தின் ஹார்ட் டிஸ்க் காணவில்லை என அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. முன்னதாக ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்துக்கும் ஹார்ட் டிஸ்க் மிஸ்ஸான பிரச்னை வந்தது தான் அந்த படம் ஓடிடியில் வெளியாக முடியாததற்கு காரணம் என்றனர்.

விஷ்ணு மஞ்சு, ப்ரீத்தி முகுந்தன், பிரபாஸ், அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், மோகன்லால், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான கண்ணப்பா திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

Kannappa movie team faced similar issue like how Aishwarya Rajinikanth faced for Lal Salaam

ஆனால், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தாமதம் காரணமாக அந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. ஜூன் 27ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்துக்கு இப்போ இப்படியொரு பிரச்னை உருவாகியிருப்பது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஃபூட்டேஜ் ரொம்ப முக்கியம்: கேமராவில் படமாக்கும் படங்களின் தினசரி ஃபூட்டேஜ்களை ஹார்ட் டிஸ்குகள் மூலமாக சேமித்து வைப்பதை திரையுலகம் வாடிக்கையாக கொண்டிருக்கிறது. எடிட்டரின் முழுக் கட்டுப்பாட்டில் தான் படத்தின் ஃபூட்டேஜ்கள் எல்லாமே இருக்கும். ஆனால், ஒரு சில நேரங்களில் சில விஷமிகள் செய்யும் தவறான செயல் காரணமாக இதுபோன்று படத்தின் ஹார்ட் டிஸ்க்கே காணாமல் போகும் சூழ்நிலை உருவாகி விடுகிறது.

ஆட்டையைப் போட்ட ஆபிஸ் பாய்: மும்பையில் இருந்து விஎஃப் டீம் அனுப்பி வைத்த ஹார்ட் டிஸ்க்கை ஆபிஸ் பாய் திருடிக் கொண்டு ஓடிவிட்டான் என்றும் சரிதா என்பவரிடம் அதை அவன் ஒப்படைத்தான் என போலீஸில் படக்குழு புகார் அளித்துள்ளனர். ஆனால், அந்த சரிதாவும் இப்போ தலைமறைவாக உள்ளாராம். ஏற்கனவே கண்ணப்பா படத்தில் இருந்து பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இப்படித்தான் லீக் ஆனது. ஆனால், தற்போது முக்கியமான விஎஃப்எக்ஸ் செய்யப்பட்ட காட்சிகளே மாயம் ஆன நிலையில், படத்தின் ரிலீஸ் மேலும், தாமதமாகுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

பிரபாஸ் காட்சிகள் தான் மாயமா?: மேலும், நடிகர் பிரபாஸ் இந்த படத்தில் நடித்திருந்த செமையான அக்‌ஷன் பிளாக் காட்சிகள் தான் மாயமானதாகவும் சுமார் 140 கோடியளவுக்கு இதனால் படக்குழுவுக்கு நஷ்டம் ஏற்படும் என்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அசால்ட்டாக ஆபிஸ் பாய் ஹார்ட் டிஸ்க் எடுத்துச் செல்லும் அளவுக்குத்தான் படக்குழு பாதுகாப்பை வைத்திருந்ததா? என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X