கன்னட திரையுலகம் இந்த ஆண்டே கல்லா கட்டப்போகுது.. காந்தாரா 2 ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?
பெங்களூர்: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் 42வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காந்தாரா படக்குழுவினர் அவர் நடிப்பில் உருவாகி வரும் காந்தாரா சாப்டர் 1 படத்தின் பிரத்யேக போஸ்டரையும் ரிலீஸ் தேதியும் வெளியிட்டு சூப்பரான பிறந்தநாள் பரிசை அவருக்கு வழங்கியுள்ளனர். ரிஷப் ஷெட்டி மற்றும் காந்தாரா பட ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பி ஆகியுள்ளனர்.
கன்னட திரையுலகம் மற்ற திரையுலகங்களை விட இந்தியாவில் குறைவான வசூல் வேட்டையை நடத்தி வந்த நிலையில், கேஜிஎஃப் 1, 2 மற்றும் காந்தாரா படங்கள் பெரிய பாக்ஸ் ஆபீஸ் படங்களாக மாறி கோலிவுட், மலையாள திரையுலகங்களுக்கே சவால் விட்டுள்ளன.

இதுவரை தமிழிலும் மலையாளத்திலும் 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் படங்கள் வெளியாகவில்லை. ஆனால், கன்னடத்தில் கேஜிஎஃப் 2 அந்த சாதனையை படைத்தது. காந்தாரா படம் 450 கோடி வசூல் ஈட்டிய நிலையில், அதன் ப்ரீக்வெல் படமாக உருவாகி வரும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் 1000 கோடி வசூல் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிஷப் ஷெட்டி பிறந்தநாள்: 1983ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி கர்நாடகாவில் உள்ள கெரடியில் பிறந்த ரிஷப் ஷெட்டி 2012ம் ஆண்டு வெளியான துக்ளக் படத்தில் வில்லனாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். ரக்ஷித் ஷெட்டி தான் அந்த படத்தின் ஹீரோ. 2016ம் ஆண்டு ரிக்கி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த கிரிக் பார்ட்டி உள்ளிட்ட படங்களையும் இயக்கினார். பல படங்களை இயக்கியும் நடித்தும் வந்த இவருக்கு 2022ம் ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. ரிஷப் ஷெட்டியின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு காந்தாரா படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
காந்தாரா 2 ரிலீஸ் தேதி: காந்தாரா 2 மற்றும் காந்தாரா சாப்டர் 1 என அழைக்கப்படும் ரிஷப் ஷெட்டியின் அடுத்த படம் இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. பரசுராமரை போல கையில் கோடரியை வைத்துக் கொண்டு இன்னொரு கையில் ஷீல்டை வைத்துக் கொண்டு கத்திக் கொண்டே ஓடிவரும் ரிஷப் ஷெட்டியின் தாறுமாறான போஸ்டர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கல்லா கட்டப்போகும் கன்னட திரையுலகம்: இந்த ஆண்டு கன்னட திரையுலகில் இதுவரை பெரிய பிளாக்பஸ்டர் படங்கள் வெளியாகவில்லை. மற்ற மொழிகளில் வெளியாகும் பெரிய படங்களும் கன்னடத்தில் டப் கூட செய்யாமல், இந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலேயே அங்கே வெளியாகி வரும் நிலையில், கன்னட ரசிகர்கள் கொண்டாடும் படமாக காந்தாரா சாப்டர் 1 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு பான் இந்தியா வெற்றியை பெற்று மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வேட்டை நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காந்தாரா திரைப்படம் 14 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 450 கோடி வரை வசூல் ஈட்டிய நிலையில், 125 கோடி ரூபாயில் இந்த படம் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் பான் இந்தியா அளவில் புரமோஷனையும் முடுக்கி விட ரிஷப் ஷெட்டி முடிவு செய்திருக்கிறாராம். அடுத்த ஆண்டு யஷ் நடித்துள்ள டாக்ஸிக் மற்றும் ராமாயணா முதல் பாகம் உள்ளிட்ட படங்களும் வெளியாகின்றன.


Click it and Unblock the Notifications











