ஸ்பெஷல்ஸ்
தென்னவன் தடுமாற்றத்தால் நிலை குலையாத கேப்டன் விஜயகாந்த் அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார்.
மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆக ஓடிய குரோனிக் பேச்சலர் படம் தமிழில் தயாராகிறது. தயாரிப்பது, சாட்சாத் விஜயகாந்த்தான்.
மலையாளத்தில் இயக்கிய சித்திக் தமிழ் ரீமேக்கையும் இயக்குகிறார். மம்முட்டி மலையாளத்தில் செய்த கேரக்டரை தமிழில்விஜயகாந்த் செய்கிறார். அதேபோல, முகேஷின் ரோலில், கார்த்திக் நடிக்கவுள்ளார்.
தேவன் படத்திற்குப் பிறகு விஜயகாந்த்தும், கார்த்திக்கும் இணையும் படம் இது. முகேஷ் கேரக்டரில் கார்த்திக்கை போடுமாறுவிஜயகாந்த்தே ரெகமன்டேஷன் செய்தாராம். எல்லாம் நட்புதான் காரணமாம்.
தேவா இசையமைப்பில் உருவாகும் இந்தப் படத்தை வேகமாக எடுத்து முடிக்க முடிவு செய்துள்ளாராம் கேப்டன்.
More from Filmibeat
ankita ar rahman baba bhoomika boomika cinema dhool ankitha directors iilayaraja kavya madhavan krrala movies music singers songs vikram


Click it and Unblock the Notifications











