ஒரு வழியாக ஏப்ரல் முதல் வாரத்தில் சைப்-கரீனா திருமணம்!
பாலிவுட் நடிகை கரீனா கபூர், நடிகர் சைப் அலி கான் திருமணம் வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடைபெறுகிறது.
பாலிவுட்டில் நீண்ட காலமாக ஜோடியாக இருப்பவர்கள் சைப் அலி கானும், கரீனா கபூரும். அவர்களின் திருமணம் இந்தா, அந்தா என்று இழுத்துக் கொண்டே போனது. இறுதியில் 2012 துவக்கத்தில் திருமணம் செய்ய மணமக்கள் முடிவு செய்தனர். இதற்கிடையே சைப் அலி கானின் தந்தை நவாப் மன்சூர் அலி கான் பட்டோடி மரணம் அடைந்தார். இதனால் அவர்களின் திருமணம் தள்ளிப் போனது.
இதற்கிடையே சைப் அலி கான் தான் முதன் முதலாக தயாரிக்கும் ஏஜெண்ட் வினோத் படம் வெளியான பிறகு தான் திருமணம் என்று கூறப்பட்டது. அந்த படத்தில் சைபும், கரீனாவும் நடிக்கின்றனர். ஏஜெண்ட் வினோத் பிப்ரவரி மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் தற்போது மார்ச் மாதம் 28ம் தேதி வெளியிடப்படுகிறது.
இதையடுத்து சைபும், கரீனாவும் வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கணவன், மனைவியாகவிருக்கின்றனர். இனிமேலும் திருமணத்தை தள்ளிப்போட கரீனா விரும்பாததால் தற்போது தேதி முடிவாகியுள்ளது என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஏஜெண்ட் வினோத் பட வேலைகள் முடிந்துள்ளதால் அவர்கள் இருவரும் ஓய்வெடுக்கச் சென்றுள்ளனர். திரும்பி வந்த பிறகு அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளைத் துவங்கவிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











