»   »  பருவமே கார்த்திகா!

பருவமே கார்த்திகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி, ஐவர் பட்டாளம் என பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் கார்த்திகாஅடுத்து திறமை காட்டும் வரும் படம் பருவமே.

தூத்துக்குடி மூலம் கோலிவுட் கொய்து வந்த சாத்துக்குடிதான் கார்த்திகா. முதல்படத்திலேயே ரசிக வட்டாரங்களை ஓரளவுக்கு வளைத்து விட்டார் கார்த்திகா. அவர்பாடி நடித்த கருவாப் பையா பாட்டு பட்டிதொட்டியெங்கும் கார்த்திகாவுக்கு ரசிகர்பட்டாளத்தை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து பிறப்பு, ஐவர் பட்டாளம் என பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.இந்தப் படங்கள் வளர்ந்து வரும் நிலையில் புதிதாக பருவமே என்ற படம்கிடைத்துள்ளது கார்த்திகாவுக்கு.

இப்படத்தை இயக்குபவர் அருண்குமாரை முதன் முதலில் அறிமுகப்படுத்திய ப்ரியம்பட இயக்குநர் பாண்டியன். இந்தப் படத்திற்கு 365 காதல் கடிதங்கள் என முதலில்பெயர் வைத்திருந்தார் பாண்டியன். இப்போது அதை பருவமே என இளமையாகமாற்றி விட்டார்.

பருவ கால காதலைத்தான் இந்தப் படத்தில் சொல்லப் போகிறாராம் பாண்டியன்.கார்த்திகாவுக்கு இதில் கிளாமரோடு கூடிய நடிப்பு வாய்ப்பாம். ஆட்டம், பாட்டம் எனஅமர்க்களப்படுத்துகிறாராம் கார்த்திகா.

கார்த்திகாவுக்கு ஜோடி போட்டிருப்பவர் பெங்களூர் பையன் கார்த்திக். ஏற்கனவேகார்த்திக் என்ற பெயரில் நிறையப் பேர் இருப்பதால் தனது பெயரை மாத்தப்போகிறாராம் கார்த்திக்.

கார்த்திக்கையும், கார்த்திகாவையும் வைத்து அமர்க்களமான போட்டோ செஷன்நடந்து முடிந்துள்ளது. இதில் கார்த்திகா கொடுத்துள்ள அம்சமான ஸ்டில்களைவிரைவில் இறக்கி விட்டு விளம்பரப்படுத்தவுள்ளார்களாம்.

Read more about: karthiga in paruvame

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil