»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

"தெய்வமே, தெய்வமே..." என்ற பாடலை இனிமேல் யாராவது கேட்டால் "லொடுக்கு" பாண்டிதான் ஞாபகத்திற்குவருவாப்ல! அதாண்ணே, நம்ம கருணாஸ்.

"நந்தா"வில் சூரியாவின் சீர்திருத்தப் பள்ளி நண்பனாக ("லொடுக்கு" பாண்டி) வந்து நீதிபதி முதல் போலீஸ் வரைஎல்லோரையும் "ஓட்டி" தள்ளி தியேட்டரையே கலகலக்க வைத்திருப்பவர் இவர்.

அப்படி ஒரு "அலப்பற"யான கேரக்டரில் "மதுர" தமிழில் "அலம்பிய" கருணாஸ் இப்போது ஒரே குஷியாகஇருக்கிறார்.

பின்ன, படமா வந்து குவிஞ்சா சும்மாவா இருப்பாப்ல. இதனால் என்ன பண்றதுண்ணே தெரியாம முழிச்சுப் போய்கெடக்காராம்.

மெட்ராஸுக்குள்ள மட்டும் பாப், கானா பாட்டுகளா பாடிக்கிட்டுத் திரிஞ்சவரக் கூப்புட்டு படத்துல நடிப்பான்னுபாலா சொன்னதும், ஏன்-எதுக்குன்னு கூட கேக்காம நடிச்சதுக்கு நல்ல பலன் கெடச்சுபுடுச்சு அப்படின்னுகூத்தாடிக்கிட்டு இருக்காப்ல.

பாலாவ நேர்ல பாத்து, "அண்ணே நீங்கதாண்ணே என் தெய்வம்" அப்படின்னு கை ரெண்டையும் தூக்கி மேலே வச்சுகருணாஸ் ஒரு கும்புடு போட்ருக்காரு.

இப்ப, கை நெறய படம் வர்றதால, பாட்ட கொஞ்ச நாளக்கி ஓரக்கட்டிட்டு அப்டியே வடிவேலு டைப்ல ஒரு ரவுண்டுவரலாம்னு பிளான்ல இருக்காப்லயாம் இந்த கருணாஸ்.

வடிவேலு வயித்த கலக்காம விட மாட்டாங்க போலருக்கே !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil