ராமநாராயணனின் குட்டிப்பிசாசு ட்ரைலரை வெளியிட்டார் கருணாநிதி!

By Staff

Karunanidhi
சிறிய இடைவெளிக்குப் பிறகு ராம நாராயணன் இயக்கும் படம் குட்டிப் பிசாசு. இந்தப் படத்தின் ட்ரைலரை முதல்வர் கருணாநிதி தனது வீட்டில் வைத்து வெளியிட்டார்.

100 படங்களுக்கும் மேல் இயக்கி சாதனை புரிந்தவர் ராம நாராயணன். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக அவர் பதவியேற்ற பிறகு புதிய படங்கள் இயக்காமல் இருந்தார். ஆனாலும் 2012 உள்பட பல மொழி மாற்றுப் படங்களை வாங்கி வெளியிட்டு பெரும் லாபம் ஈட்டினார்.

இப்போது மீண்டும் ஒரு படத்தை தயாரித்து இயக்குகிறார். இது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

ஆங்கிலப் படங்களுக்கு சவால் விடும் வகையில், அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸில் அசத்தியுள்ளார்களாம் இந்தப் படத்தில். இதற்கான கிராபிக்ஸ் வேலைகளை சில்வர்லைன் நிறுவனம் ஒரு வருடமாக செய்து வந்தது!

இதுவரை எந்த மொழிப் படங்களிலும் இடம்பெறாத 18 அடி உயர பிரமாண்ட கார் மனிதன் இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்டதாகக் கூறுகிறார் ராம நாராயணன்.

படத்தில் குட்டிப் பிசாசாக நடிப்பவர் பேபி கீர்த்திகா. ராம்ஜி, சங்கீதா, ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மூன்று வில்லன்களும் உண்டாம் படத்தில்.

தேவா இசையில், கோடை விடுமுறை ஸ்பெஷலாக, குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்ய வருகிறது குட்டிப் பிசாசு.

இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி அடங்கிய கேசட்டை முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டார். இயக்குநர் ராம நாராயணன், இயக்குநர் அமிர்தம், முரசொலி செல்வம் மற்றும் முரளி ராமநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X