நடிகர் ராஜேஷ் மகள் திருமண வரவேற்பு-கருணாநிதி, ரஜினி,கமல்வாழ்த்து!

நடிகர் ராஜேஷின் மகள் ஆர்.திவ்யாவுக்கும், தஞ்சாவூர் ஜெயகர் கிர்பால்சிங்-சிந்தியா ஜெயகர் ஆகியோரின் மூத்த மகன் ஜெ.பிரதீப் சாமுவேல் என்ற சாப்ட்வேர் என்ஜினீயருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை ராணி மெய்யம்மை மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது.
இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் அன்பழகன், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, நெப்போலியன், முதல்வரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
ரஜினி - கமல்
நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், கவுண்டமணி உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்தினர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி எம்.பி., திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., கோபண்ணா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாரதீய ஜனதா கட்சி முன்னாள் தலைவர் இல.கணேசன், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. எல்.கணேசன், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி தலைவர் டாக்டர் சேதுராமன், ம.தி.மு.க. நாஞ்சில் சம்பத், சிறுபான்மை சமூக புரட்சி இயக்க தலைவர் லியாகத் அலிகான், கவிஞர் வைரமுத்து, வனத்துறை செயலாளர் வெ.இறையன்பு உள்பட திரளானோர் வந்து வாழ்த்தினர்.
ஜெயலலிதா சார்பில்...
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சார்பில் வாழ்த்தும், பரிசுப் பொருளும் அனுப்பப்பட்டது.
நிகழ்ச்சியில் ரேவதி கிருஷ்ணா குழுவினரின் வீணை கச்சேரியும் நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை நடிகர் ராஜேஷ், அவரது மனைவி ஜோன் சில்வியா ராஜேஷ், மகன் ஆர்.திலிப் ஆகியோர் வரவேற்றனர்.


Click it and Unblock the Notifications











