பொன்னர் சங்கர்: கமலுடன் பார்த்தார் கருணாநிதி!

நடிகர் தியாகராஜன் இயக்கி, தயாரித்துள்ள இந்தப் படத்தில் அவரது மகன் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
இப் படம் சில தினங்களுக்கு தமிழகம் முழுவதும் வெளியானது. தேர்தல் பிரசாரத்தை முடித்த முதல்வர் கருணாநிதி இப்படத்தை செவ்வாய்க்கிழமை பார்த்தார்.
அவருடன் நிதி அமைச்சர் அன்பழகன், நடிகர் கமல்ஹாசன், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராசன் ஆகியோரும் பார்த்தனர்.
படத்தை சிறப்பாக எடுத்துள்ளதாக இயக்குநரும் தயாரிப்பாளருமான தியாகராஜனை அனைவரும் பாராட்டினர்.
Comments


Click it and Unblock the Notifications