முதல்வர் கருணாநிதியுடன் பொன்னர் சங்கர் பார்த்தார் ரஜினி!

By Shankar

Rajini and Karunanidhi
முதல்வர் கருணாநிதி கதை திரைக்கதை வசனம் எழுதி, சமீபத்தில் வெளிவந்துள்ள பொன்னர் சங்கர் வரலாற்றுப் படத்தை, முதல்வருடன் சேர்ந்து பார்த்தார் ரஜினிகாந்த்.

தியாகராஜன் இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ள பொன்னர்-சங்கர் திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப் பிரிவியூ அரங்கில் திரையிடப்பட்டது.

இந்த திரைப்படத்தை திமுக தலைவர் முதல்வர் கருணாநிதியுடன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்தார். படம் பிரமாண்டமாகவும், நேர்த்தியுடனும் வந்திருப்பதாகப் பாராட்டினார் ரஜினி. நாயகன் பிரசாந்த் மற்றும் இயக்குநர் தியாகராஜனுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இந்த காட்சிக்கு நடிகரும் மத்திய அமைச்சருமான நெப்போலியன், பிரபு, பாக்யராஜ், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழும அதிபர் கலாநிதி மாறன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரும் வந்திருந்தனர்.

நேற்று இந்த படத்தை கலைஞருடன் நடிகர் கமல்ஹாசன், நிதி அமைச்சர் அன்பழகன், மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோருடன் முதல்வர் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X