மீண்டும் வரும் கஸ்தூரி!

By Staff

முன்னாள் நாயகி, கஸ்தூரி குத்தாட்டம் போட ரெடியாகி விட்டார். சேதி அறிந்த பல தயாரிப்பாளர்கள் கஸ்தூரியை தங்களது படத்தில் ஆட வைக்கஅணுகியுள்ளனராம்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சிறு ரவுண்டு அடித்தவர் கஸ்தூரி. 2ம் நிலை நாயகர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்த கஸ்தூரி அதன்பின்னர் காணாமல் போனார். கடைசியாக காதல் கவிதை படத்தில் பிரசாந்த்தை ஒரு தலையாக காதலிக்கும் நாயகியாக வந்து போனார்.

அதன் பின்னர் சுத்தமாக சினிமாவை விட்டு விட்ட கஸ்தூ> இடையில், சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிறகு, அதையும் விட்டுவிட்டு கல்யாணம் செய்து கொண்டு லண்டனில் போய் செட்டிலாகி விட்டார்.

இப்போது மீண்டும் சினிமா ஆசை பிறந்துள்ளதாம் கஸ்தூரிக்கு. அதிலும், குத்தாட்டம், வில்லி வேடம் என விபரீதமாக ஆசைப்பட்டுள்ளார்கஸ்தூரி. கணவரை இங்கிலாந்திலேயே விட்டு விட்ட கஸ்தூரி மட்டும் சென்னைக்கு வந்துள்ளார்.

சமீப காலமாக அவரை சினிமா விழாக்களில் சந்திக்க முடிகிறது. சினிமா விழாக்கள் சிலவற்றை அவர் தொகுத்தும் வழங்குகிறார். தமிழ் சினிமாவில்இப்போது குத்தாட்ட சீசன். எனவே நானும் குத்தாட்டம் போட்ட அசத்த ரெடி என்று பகிரங்கமாகவே ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார் கஸ்தூ>.

அதேபோல, உயிர் படத்தில் சங்கீதா நடித்ததைப் பான்ற வில்லங்கமான பாத்திரங்களில் நடிக்கவும் படு ஆசையாக இருக்கிறாராம். கஸ்தூரியின்ஆசை சில தயாரிப்பாளர்களின் காதுகளை எட்டியுள்ளதாம்.

இதையடுத்து அவரை தங்களது படத்தில் குத்தாட்டம் போட வைக்க அணுகியுள்ளனராம். விரைவில் கஸ்தூரியின் கமகமக ஆட்டத்தைக் காணும்பாக்கியம் ரசிகர்களுக்குக் கிடைக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X