»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

பாரதிராஜாவால் ஈர நிலம் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரேகாவும் கலாஷேத்ரா மாணவி தானாம்.

முதலில்சுகன்யாவை இங்கிருந்து தான் சினிமாவுக்கு அழைத்து வந்தார் பாரதிராஜா.

கடலோரக் கவிதைகள் ரேகாஇப்போது திரையுலகில் இருந்து ஒதுக்கப்பட்டுவிட்டதால் கலாஷேத்ரா மாணவியான ரேகா உன்னிகிருஷ்ணனைரேகா என்று சுருக்கி அறிமுகப்படுத்தினார்.

கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். ஈர நிலம் படம் சரியாகப் போகததால் இவருக்கு அவ்வளவாக சான்ஸ்கள்வரவில்லை.

முதல் படத்திலேயே ஒரு குழந்தைக்குத் தாயாக நடித்ததும் ட்ராபேக் ஆகிவிட்டது.

இருந்தாலும் கோலிவுட்டில் தீவிரமான சான்ஸ் வேட்டையில் இறங்கியுள்ள ரேகா, கவர்ச்சி காட்டவும் தயார் தான்என்று சொல்லி வாய்ப்பு கேட்டு வருகிறார்.

இங்கு மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளத்திலும் ஆள்வைத்து சான்ஸ் தேடியதன் விளைவாக கன்னடத்தில் ஒரு படத்தில் புக் ஆகியுள்ளார்.


ஆங்கில நடிகையாகும் கஸ்தூரி

நடிகை கஸ்தூரி ஆங்கிலப் படம் ஒன்றில் நடிக்கிறார்.

கல்யாணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட கஸ்தூரிShoots and ladders என்ற படத்தில் நடித்தார்.

இப்போது மீண்டும் Quiet dignity என்ற படத்தில் நடித்துவருகிறார். அத்தோடு Beauty என்ற இன்னொரு படத்திலும் புக் ஆகியிருக்கிறார்.

எல்லாமே கொஞ்சம்கிளுகிளுப்பு கொண்ட லோ பட்ஜெட் படங்கள் தானாம்.


வினிதாவின் யோகா டீச்சர்

வினிதா நடித்துதுள்ள பலான படமான யோகா டீச்சர் விரைவில் வெளிவரவுள்ளது.

விபச்சார வழக்கில்சிக்குவதற்கு முன்பாக வினிதா நடிக்க ஆரம்பித்த படம் இது. படத்தில் படு கவர்ச்சி காட்டியிருக்கிறாராம்.

இப்போது வழக்கில் சிக்கிவிட்டதால் படத்துக்கு அதுவே விளம்பரமாகவும் அமைந்துவிட்டது.

குரல் தானத்தை நிறுத்தப் போகும் ரதி

சொல்ல மறந்த கதையில் ஹீரோயினாக அறிமுகமான ரதிக்கு இப்போது பிற நடிகைகளுக்குப் டப்பிங் பேசுவதே முழு நேரத் தொழில்ஆகிவிட்டது.

நல்ல குரல் வளம் உள்ள ரதி, பெங்களூல் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் கூட, தாய் மொழியான தமிழை நன்றாகவேப்பேசுகிறார்.

ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நாயகி ஹரிணிக்கு பின்னணி பேசியது ரதி தான்.

டப்பிங் மூலம் நல்ல பணம் கிடைத்தாலும் கூட, ஹீரோயினாக முன்னணிக்கு வருவது தான் தன் லட்சியம் என்று கூறும் ரதி, குரல்தானம் செய்வதை நிறுத்துவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil