»   »  ஒயிலிடை காத்ரீனா!

ஒயிலிடை காத்ரீனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலிவுட் புயல் காத்ரீனா கைபை பார்ப்பவர்கள் அசந்து போய் விடுவார்கள். அந்தஅளவுக்கு எடை குறைந்து, படு எடுப்பாக காட்சி தருகிறார் காத்ரீனா.

இங்கிலாந்து அம்மாவுக்கும், இந்திய தந்தைக்கும் பிறந்தவர்தான் காத்ரீனா. இந்தஅழகு குயில் பிறந்தது லண்டனில். வளர்ந்து, வயதுக்கு வந்ததும் மாடலிங்கில்குதித்தார் காத்ரீனா. அவரது அசத்தல் அழகைப் பார்த்து வியர்த்துப் போனபாலிவுட்கார்கள் காத்ரீனாவை ஹைஜாக் செய்து மும்பைக்குக் கூட்டி வந்துநடிகையாக்கி விட்டனர்.

இந்தித் திரையுலகில் நுழைந்த நிமிடம் முதல் கவர்ச்சி களேபரத்தை ஆரம்பித்துவிட்டார் காத்ரீனா. புயல் போல நுழைந்த அவர் இப்போது சூறாவளியாக மாறி பலமுன்னணி ஹீரோயின்களை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு பட்டையக் கிளப்பிவருகிறார்.

முன்பு கொஞ்சம் போல சதைப்பற்றுடன் இருந்த காத்ரீனா இப்போது வெகுவாகஎடையைக் குறைத்து படு எடுப்பான தோற்றத்துக்கு மாறியுள்ளார். அடடாகாத்ரீனாவா இது என்று ஆச்சரியப்பட்டு கேட்டால், ஆமாம், நானேதான் என ஒயிலாகசிரிக்கிறார்.

நமஸ்தே லண்டன் என்ற புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதில் நான்எனது சொந்தக் குரலிலேயே முதல் முறையாகப் பேசப் போகிறேன். இப்படத்தில்நடிக்க நான் கொஞ்சம் ஒல்லியாக வேண்டும் என்று கூறினார்கள். அதனால்மெல்லிடையாளாக மாறி விட்டேன் என்று இடுப்பை ஒரு சுற்று சுற்றிக் காட்டினார்.

இப்படத்தில் படு மாடர்ன் பொண்ணாக வருகிறாராம் காத்ரீனா. முதல் முறையாகசொந்தக் குரலில் பேசப் போவதால் இந்தி வார்த்தைகளை சரியாக உச்சரிக்க வேண்டும்என்பதற்காக மெனக்கெட்டு பயிற்சியெல்லாம் எடுத்துக் கொள்கிறாராம்.

ஷோலேவின் ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு காத்ரீனாவுக்கு வந்ததாம். ஆனால்அப்போது பிசியாக இருந்ததால் அந்த வாய்ப்பு நழுவிட்டதாம். வருத்தத்தோடுசொல்கிறார் காத்ரீனா.

காத்ரீனாவின் ஒரே குறை என்னவென்றால், சினிமாவில் படு பிசியாக இருப்பதால்சரியாக சாப்பிடாமல், உடல் அழகை பேண முடியாமல் டைம் இல்லாமல்அவதிப்படுகிறாராம்.

உடல் அழகைப் பேணாதபோதே இவ்வளவு இம்சிக்கிறாரே, அதை இன்னும் பேணஆரம்பித்தால் சேதுவாகிப் போவார்களே இந்திய இளைஞர்கள்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil