»   »  புயலை கிளப்பிய காத்ரீனா உலகப் புகழ் பெற்ற ஆஜ்மீர் தர்காவில் கவர்ச்சிகரமான உடையை அணிந்து நடிகைகாத்ரீனா கைஃப் நடித்ததற்கு இஸ்லாமிய மதகுருமார்கள் கடும் எதிர்ப்புதெரிவித்ததால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.நடிகை காத்ரீனா கைஃப் நமஸ்தே லண்டன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு புகழ் பெற்ற ஆஜ்மீர் காஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில்நடந்தது. அந்தக் காட்சியில் காத்ரீனா கைஃப் கவர்ச்சியான உடை அணிந்து நடித்தார்.இதைப் பார்த்த இஸ்லாமிய மதகுருமார்கள் சிலர், கைஃப் அணிந்திருந்த உடைக்குகடும் ஆட்சேபம் தெரிவித்தனர். மிகப் புனிதமான தர்காவில் இதுபோல அரைகுறைஆடையுடன் ஷூட்டிங் நடத்துவதை அனுமதிக்க மடியாது என்று அவர்கள் எதிர்ப்புத்தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து படப்பிடிப்பை நிறுத்துமாறு தர்கா நிர்வாகம் இயக்குனர் விபுல்ஷாவுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.இந்த சர்ச்சை குறித்து தர்கா கமிட்டி தலைவரான நவாப் ஹிதாயதுல்லா கூறுகையில்,காத்ரீனா கைஃப் அணிந்திருந்த உடைக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால்படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.புகழ் பெற்ற இந்த தர்காவில் படப்பிடிப்பு நடத்த மத்திய சமூக நலத்துறையிடம் முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த படப்பிடிப்புக்கு அவர்கள் அனுமதிபெறவில்லை என்றார்.படப்பிடிப்பில் கலந்து கொண்ட காத்ரீனா கைஃப், முழங்கால் வரை மட்டுமேகொண்ட ஒரு கவுனை அணிந்திருந்தார். முழங்காலுக்குக் கீழே அவரது கால்கள்தெரியும் வகையில் உடை இருந்தது.இந்த உடையுடன் பிரார்த்தனை செய்வது போன்ற காட்சியில் கைஃப்நடிக்கும்போதுதான் பிரச்சினை எழுந்தது. இந்தக் காட்சியில் நடிகர் ரிஷி கபூரும்நடித்தார். படப்பிடிப்பை பகல் நேரத்தில் அனைவரும் நமாஸ் செய்யும் நேரத்தில் வைத்ததும்இஸ்லாமிய மதகுருமார்களை எரிச்சலடைய வைத்தது. மேலும் படப்பிடிப்புக்குழுவினர் போட்ட சப்தம் அவர்களை கடுப்பில் ஆழ்த்தியது.

புயலை கிளப்பிய காத்ரீனா உலகப் புகழ் பெற்ற ஆஜ்மீர் தர்காவில் கவர்ச்சிகரமான உடையை அணிந்து நடிகைகாத்ரீனா கைஃப் நடித்ததற்கு இஸ்லாமிய மதகுருமார்கள் கடும் எதிர்ப்புதெரிவித்ததால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.நடிகை காத்ரீனா கைஃப் நமஸ்தே லண்டன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு புகழ் பெற்ற ஆஜ்மீர் காஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில்நடந்தது. அந்தக் காட்சியில் காத்ரீனா கைஃப் கவர்ச்சியான உடை அணிந்து நடித்தார்.இதைப் பார்த்த இஸ்லாமிய மதகுருமார்கள் சிலர், கைஃப் அணிந்திருந்த உடைக்குகடும் ஆட்சேபம் தெரிவித்தனர். மிகப் புனிதமான தர்காவில் இதுபோல அரைகுறைஆடையுடன் ஷூட்டிங் நடத்துவதை அனுமதிக்க மடியாது என்று அவர்கள் எதிர்ப்புத்தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து படப்பிடிப்பை நிறுத்துமாறு தர்கா நிர்வாகம் இயக்குனர் விபுல்ஷாவுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.இந்த சர்ச்சை குறித்து தர்கா கமிட்டி தலைவரான நவாப் ஹிதாயதுல்லா கூறுகையில்,காத்ரீனா கைஃப் அணிந்திருந்த உடைக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால்படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.புகழ் பெற்ற இந்த தர்காவில் படப்பிடிப்பு நடத்த மத்திய சமூக நலத்துறையிடம் முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த படப்பிடிப்புக்கு அவர்கள் அனுமதிபெறவில்லை என்றார்.படப்பிடிப்பில் கலந்து கொண்ட காத்ரீனா கைஃப், முழங்கால் வரை மட்டுமேகொண்ட ஒரு கவுனை அணிந்திருந்தார். முழங்காலுக்குக் கீழே அவரது கால்கள்தெரியும் வகையில் உடை இருந்தது.இந்த உடையுடன் பிரார்த்தனை செய்வது போன்ற காட்சியில் கைஃப்நடிக்கும்போதுதான் பிரச்சினை எழுந்தது. இந்தக் காட்சியில் நடிகர் ரிஷி கபூரும்நடித்தார். படப்பிடிப்பை பகல் நேரத்தில் அனைவரும் நமாஸ் செய்யும் நேரத்தில் வைத்ததும்இஸ்லாமிய மதகுருமார்களை எரிச்சலடைய வைத்தது. மேலும் படப்பிடிப்புக்குழுவினர் போட்ட சப்தம் அவர்களை கடுப்பில் ஆழ்த்தியது.

Subscribe to Oneindia Tamil

உலகப் புகழ் பெற்ற ஆஜ்மீர் தர்காவில் கவர்ச்சிகரமான உடையை அணிந்து நடிகைகாத்ரீனா கைஃப் நடித்ததற்கு இஸ்லாமிய மதகுருமார்கள் கடும் எதிர்ப்புதெரிவித்ததால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

நடிகை காத்ரீனா கைஃப் நமஸ்தே லண்டன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு புகழ் பெற்ற ஆஜ்மீர் காஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில்நடந்தது. அந்தக் காட்சியில் காத்ரீனா கைஃப் கவர்ச்சியான உடை அணிந்து நடித்தார்.

இதைப் பார்த்த இஸ்லாமிய மதகுருமார்கள் சிலர், கைஃப் அணிந்திருந்த உடைக்குகடும் ஆட்சேபம் தெரிவித்தனர். மிகப் புனிதமான தர்காவில் இதுபோல அரைகுறைஆடையுடன் ஷூட்டிங் நடத்துவதை அனுமதிக்க மடியாது என்று அவர்கள் எதிர்ப்புத்தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து படப்பிடிப்பை நிறுத்துமாறு தர்கா நிர்வாகம் இயக்குனர் விபுல்ஷாவுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்த சர்ச்சை குறித்து தர்கா கமிட்டி தலைவரான நவாப் ஹிதாயதுல்லா கூறுகையில்,காத்ரீனா கைஃப் அணிந்திருந்த உடைக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால்படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.புகழ் பெற்ற இந்த தர்காவில் படப்பிடிப்பு நடத்த மத்திய சமூக நலத்துறையிடம் முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த படப்பிடிப்புக்கு அவர்கள் அனுமதிபெறவில்லை என்றார்.

படப்பிடிப்பில் கலந்து கொண்ட காத்ரீனா கைஃப், முழங்கால் வரை மட்டுமேகொண்ட ஒரு கவுனை அணிந்திருந்தார். முழங்காலுக்குக் கீழே அவரது கால்கள்தெரியும் வகையில் உடை இருந்தது.

இந்த உடையுடன் பிரார்த்தனை செய்வது போன்ற காட்சியில் கைஃப்நடிக்கும்போதுதான் பிரச்சினை எழுந்தது. இந்தக் காட்சியில் நடிகர் ரிஷி கபூரும்நடித்தார்.

படப்பிடிப்பை பகல் நேரத்தில் அனைவரும் நமாஸ் செய்யும் நேரத்தில் வைத்ததும்இஸ்லாமிய மதகுருமார்களை எரிச்சலடைய வைத்தது. மேலும் படப்பிடிப்புக்குழுவினர் போட்ட சப்தம் அவர்களை கடுப்பில் ஆழ்த்தியது.

Please Wait while comments are loading...