ஆஸ்கரை இழந்த 'கவி'

2010ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஆர்ப்பாட்டமாக இருந்த இந்தியர்கள், இந்த முறை எந்தவித உற்சாகமும் இன்றி காணப்பட்டனர். காரணம், இந்தியர்கள் யாரும் இந்த முறை விருது பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறாததே.
ஆனால் கவி என்ற இந்தி குறும்படம் ஒன்று விருதுப் போட்டியில் இருந்தது. அமெரிக்க இயக்குநர் கிரேக் ஹெல்வி இதை இயக்கியிருந்தார். இந்திய அடிமைச் சிறுவன் குறித்த 19 நிமிடப் படம் இது. இந்தியிலேயே இது இயக்கப்பட்டிருந்தது.
சிறந்த குறும்படப் பிரிவில் கவி இடம் பெற்றிருந்தது. ஆனால் இந்த விருதை டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தி நியூ டெனன்ட்ஸ் படம் தட்டிச் சென்று விட்டது.
இந்தப் படத்தில் மும்பையைச் சேர்ந்த சிறுவனின் கதைதான் சித்தரிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆஸ்கர் விருது விழாவில் மும்பையைக் கதைக் களமாக கொண்டு எடுக்கப்பட்ட ஸ்லம்டாக் மில்லியனர் படம் 8 விருதுகளை அள்ளியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











