லூசு பெண்ணே பாட்டுக்கு பின்னாடி இப்படி ஒரு பிளாஷ் பேக் இருக்கா? வாலி பகிர்ந்த சுவாரஸ்யம்!

சென்னை: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிலம்பரசன். காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

அதன் பிறகு தம், அலை, கோவில், குத்து, மன்மதன் என்று பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் சிலம்பரசன்.

சிலம்பரசன் எழுதிய லூசு பெண்ணே பாடலுக்கு பின்னால் இருக்கும் ரகசியத்தை கூறியுள்ளார் வாலி.

ஹிட் படங்கள் கொடுத்த சிம்பு

ஹிட் படங்கள் கொடுத்த சிம்பு

வல்லவன், காளை, சிலம்பாட்டம் என்று நடித்துக் கொண்டிருந்த நடிகர் சிம்புவுக்கு விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. நடிகராக மட்டுமில்லாமல் பாடலாசிரியராகவும், பாடகராகவும் தனக்குள் பல திறமைகளை கொண்டுள்ளார் நடிகர் சிலம்பரசன். இவர் எழுதிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. இவர் நடித்த வல்லவன் படம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. வல்லவன் படத்தில் சிம்புவுடன் இணைந்து நயன்தாரா, ரீமாசென், காதல் சந்தியா, சந்தானம் போன்ற பலரும் நடித்திருந்தனர்.

இயக்குநரான சிம்பு

இயக்குநரான சிம்பு

வல்லவன் படத்தை எழுதி, இயக்கியவர் சிலம்பரசன். இப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்திற்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் இடம்பெற்றுள்ள லூசு பெண்ணே பாடல் மிகவும் பிரபலமானது. இவரை எழுதிய இந்த பாடல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மிகவும் பேசப்பட்டது. வல்லவன் படத்தில் இடம்பெற்றுள்ள லூசு பெண்ணே பாடல் உள்ள ரகசியத்தையும் அதன் பின்னணியையும் கூறியுள்ளார் எழுத்தாளர் வாலி.

பிரபல எழுத்தாளர் வாலி

பிரபல எழுத்தாளர் வாலி

1950களிலிருந்து எழுத்தாளர் வாலியின் பாடல்களுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்களுக்கு ஏற்றவாறு பாடல்களை எழுதுவதில் வல்லவர். எந்த சிட்டுவேஷனுக்கு எப்படி வரிகள் எழுத வேண்டும் என்று உணர்ந்து எழுதக்கூடிய வல்லவர். பாடலாசிரியர் வாலி எழுதிய பல பாடல்களுக்கு இன்றும் மவுசுக்குரிய வில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு பெரிய படைப்பாளியான வாலியின் பெயரை சிம்பு தனது லூசு பெண்ணே பாடலில் பயன்படுத்தி உள்ளார், லூசு பெண்ணே பாடல் இடம் பெற்றுள்ள வரிகள் " வாலி போல பாட்டு எழுத எனக்கு தான் தெரியலையே , உன்ன பத்தி பாடாமா தான் இருக்க முடியலையே " என்று எழுதி இருப்பார் சிம்பு.

வாலி ரியாக்ஷன்

வாலி ரியாக்ஷன்

இந்த பாடலை எழுதி முடித்தவுடன் எழுத்தாளர் வாலியிடம் சிம்பு காண்பித்துள்ளார். இதைக் கேட்ட வாலி என்ன கூறியுள்ளார் என்ற த்ரோ பேக் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்படுகின்றது. பாடலைப் பார்த்த வாலி, சிம்புவுடன் கூறியதாவது,"ஏம்பா என் பேர போட்டு இருக்கியே , உங்க அப்பாவே பெரிய பாடலாசிரியர் தானே. உங்க அப்பாவின் பெயரை போட்டு இருக்கலாம் அல்லவா என்று கேட்டுள்ளார். அதுக்கு சிம்பு அப்பாவிடம் பாடலை காண்பித்து விட்டேன். அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. மிகப்பெரிய பாடல் ஆசிரியரான உங்கள் பெயரை பயன்படுத்தியதற்காக என்னை பாராட்டினார் என்று சிம்பு கூறியுள்ளார். இதைக் கேட்ட வாலியும் சரி என்று கூறியுள்ளார். அந்த பாடல் மிகவும் பிரபலமானதையும், ட்ரெண்ட் செட் செய்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார் எழுத்தாளர் வாலி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X