»   »  பாலசந்தருக்கு வந்த சோதனை தமிழ் சினிமாவில் புதிய பாதை போட்ட இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்இயக்கத்தில் உருவாகியுள்ள பொய் படம், வாங்க ஆளில்லாமல் சிரமப்பட்டுவிட்டதாம்.தமிழ் சினிமாவின் கதைக் களத்தை தடம் மாற்றி புத்தாடை அணிவித்துபுதுமைப்படுத்தியவர் கே.பி. வித்தியாசமான கதைகளை கையில் எடுத்து தனி ரசிகர்வட்டாரத்தை உருவாக்கியவர்.கே.பி. பாணி படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அவரதுபாணியைப் பின்பற்றி பல இயக்குனர்கள் உருவானார்கள். இவரது கைபட்ட நடிகர்,நடிகைகள் உச்சத்திற்குப் போனார்கள்.இயக்கத்தில் புதிய சிகரத்தை எட்டியவரான கே.பாலச்சந்தரின் 100வது படம்பார்த்தாலே பரவசம். நல்ல படமாக இருந்தும் சரியாக போகவில்லை. இதனால் சற்றேஇயக்கத்திற்குப் பிரேக் விட்டார் கே.பி. முழுமையாக தயாரிப்பில் இறங்கி பலவெற்றிப் படங்களை வெளியிட்டார்.இந் நிலையில்தான் அவரை அழைத்து தனது தயாரிப்பில் 101வது படமாக பொய்படத்தை இயக்கக் கோரினார் சிஷ்யர் பிரகாஷ் ராஜ்.ஆஸ்திரேலிய தமிழச்சியான விமலா ராமனை இப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குஅறிமுகப்படுத்துகிறார் கே.பி. படத்தை முழுக்க முழுக்க இலங்கையிலேயே எடுத்தார்.கீது மோகன் தாஸ் மற்றும் தெலுங்கைச் சேர்ந்த ரவி கிரண் ஆகியோரும் இதில் நடித்திருந்தனர்.படம் முடிந்து நாளாகியும் எப்போது ரிலீஸ் என்பது தெரியாமல் இருந்து வந்தது.என்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்தால், படத்தை வாங்க வினியோகஸ்தர்கள்யாரும் முன் வரவில்லையாம். இந்தக் காலத்து டிரெண்டுக்கேற்ற குத்தாட்டம்,குமுக்காட்டம் என எதுவும் இல்லாததால், படத்தை வாங்கி என்ன செய்வது என்றுவினியோகஸ்தர்கள் தயக்கம் காட்டினராம்.இதனால் படம் நன்றாக வந்திருந்தும், வியாபாரம் ஆகாமல் இருந்து வந்தது. இதைக்கேள்விப்பட்ட ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தானே வெளியிடுவதாக கூறிவினியோக உரிமையை மொத்தமாக வாங்கியுள்ளாராம்.விரைவில் பொய், வெள்ளித் திரையை அலங்கரிக்க வரும் என்கிறார்கள்.

பாலசந்தருக்கு வந்த சோதனை தமிழ் சினிமாவில் புதிய பாதை போட்ட இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்இயக்கத்தில் உருவாகியுள்ள பொய் படம், வாங்க ஆளில்லாமல் சிரமப்பட்டுவிட்டதாம்.தமிழ் சினிமாவின் கதைக் களத்தை தடம் மாற்றி புத்தாடை அணிவித்துபுதுமைப்படுத்தியவர் கே.பி. வித்தியாசமான கதைகளை கையில் எடுத்து தனி ரசிகர்வட்டாரத்தை உருவாக்கியவர்.கே.பி. பாணி படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அவரதுபாணியைப் பின்பற்றி பல இயக்குனர்கள் உருவானார்கள். இவரது கைபட்ட நடிகர்,நடிகைகள் உச்சத்திற்குப் போனார்கள்.இயக்கத்தில் புதிய சிகரத்தை எட்டியவரான கே.பாலச்சந்தரின் 100வது படம்பார்த்தாலே பரவசம். நல்ல படமாக இருந்தும் சரியாக போகவில்லை. இதனால் சற்றேஇயக்கத்திற்குப் பிரேக் விட்டார் கே.பி. முழுமையாக தயாரிப்பில் இறங்கி பலவெற்றிப் படங்களை வெளியிட்டார்.இந் நிலையில்தான் அவரை அழைத்து தனது தயாரிப்பில் 101வது படமாக பொய்படத்தை இயக்கக் கோரினார் சிஷ்யர் பிரகாஷ் ராஜ்.ஆஸ்திரேலிய தமிழச்சியான விமலா ராமனை இப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குஅறிமுகப்படுத்துகிறார் கே.பி. படத்தை முழுக்க முழுக்க இலங்கையிலேயே எடுத்தார்.கீது மோகன் தாஸ் மற்றும் தெலுங்கைச் சேர்ந்த ரவி கிரண் ஆகியோரும் இதில் நடித்திருந்தனர்.படம் முடிந்து நாளாகியும் எப்போது ரிலீஸ் என்பது தெரியாமல் இருந்து வந்தது.என்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்தால், படத்தை வாங்க வினியோகஸ்தர்கள்யாரும் முன் வரவில்லையாம். இந்தக் காலத்து டிரெண்டுக்கேற்ற குத்தாட்டம்,குமுக்காட்டம் என எதுவும் இல்லாததால், படத்தை வாங்கி என்ன செய்வது என்றுவினியோகஸ்தர்கள் தயக்கம் காட்டினராம்.இதனால் படம் நன்றாக வந்திருந்தும், வியாபாரம் ஆகாமல் இருந்து வந்தது. இதைக்கேள்விப்பட்ட ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தானே வெளியிடுவதாக கூறிவினியோக உரிமையை மொத்தமாக வாங்கியுள்ளாராம்.விரைவில் பொய், வெள்ளித் திரையை அலங்கரிக்க வரும் என்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் புதிய பாதை போட்ட இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்இயக்கத்தில் உருவாகியுள்ள பொய் படம், வாங்க ஆளில்லாமல் சிரமப்பட்டுவிட்டதாம்.

தமிழ் சினிமாவின் கதைக் களத்தை தடம் மாற்றி புத்தாடை அணிவித்துபுதுமைப்படுத்தியவர் கே.பி. வித்தியாசமான கதைகளை கையில் எடுத்து தனி ரசிகர்வட்டாரத்தை உருவாக்கியவர்.

கே.பி. பாணி படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அவரதுபாணியைப் பின்பற்றி பல இயக்குனர்கள் உருவானார்கள். இவரது கைபட்ட நடிகர்,நடிகைகள் உச்சத்திற்குப் போனார்கள்.


இயக்கத்தில் புதிய சிகரத்தை எட்டியவரான கே.பாலச்சந்தரின் 100வது படம்பார்த்தாலே பரவசம். நல்ல படமாக இருந்தும் சரியாக போகவில்லை. இதனால் சற்றேஇயக்கத்திற்குப் பிரேக் விட்டார் கே.பி. முழுமையாக தயாரிப்பில் இறங்கி பலவெற்றிப் படங்களை வெளியிட்டார்.

இந் நிலையில்தான் அவரை அழைத்து தனது தயாரிப்பில் 101வது படமாக பொய்படத்தை இயக்கக் கோரினார் சிஷ்யர் பிரகாஷ் ராஜ்.


ஆஸ்திரேலிய தமிழச்சியான விமலா ராமனை இப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குஅறிமுகப்படுத்துகிறார் கே.பி. படத்தை முழுக்க முழுக்க இலங்கையிலேயே எடுத்தார்.கீது மோகன் தாஸ் மற்றும் தெலுங்கைச் சேர்ந்த ரவி கிரண் ஆகியோரும் இதில் நடித்திருந்தனர்.

படம் முடிந்து நாளாகியும் எப்போது ரிலீஸ் என்பது தெரியாமல் இருந்து வந்தது.


என்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்தால், படத்தை வாங்க வினியோகஸ்தர்கள்யாரும் முன் வரவில்லையாம். இந்தக் காலத்து டிரெண்டுக்கேற்ற குத்தாட்டம்,குமுக்காட்டம் என எதுவும் இல்லாததால், படத்தை வாங்கி என்ன செய்வது என்றுவினியோகஸ்தர்கள் தயக்கம் காட்டினராம்.

இதனால் படம் நன்றாக வந்திருந்தும், வியாபாரம் ஆகாமல் இருந்து வந்தது. இதைக்கேள்விப்பட்ட ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தானே வெளியிடுவதாக கூறிவினியோக உரிமையை மொத்தமாக வாங்கியுள்ளாராம்.

விரைவில் பொய், வெள்ளித் திரையை அலங்கரிக்க வரும் என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil