குச்சி தனுஷுக்கு குல்பி ஜோடி திருவிளையாடல், பரட்டை என்கிற அழகுசுந்தரம் என மீண்டும் பிசியாக ஆரம்பித்திருக்கும் தனுஷ் நடிக்கும்இன்னொரு படத்தில் டெல்லியிலிருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகியுள்ள குல்பி ஐஸ் கீரத் ஜோடியாகநடிக்கிறாராம்.ஒரே படம் மூலம் டாப் கியருக்குப் போன தனுஷ், 3 படங்களை முடித்தவுடன் அதே வேகத்தில் கீழே போய்விட்டார். இப்போது மீண்டும் தனுஷ் பக்கம் அதிர்ஷ்டக் காத்து வீச ஆரம்பித்திருக்கிறது.ஷ்ரேயாவுடன் திருவிளையாடல், மீரா ஜாஸ்மினுடன் பரட்டை என்கிற அழகுசுந்தரம் என ஒரே நேரத்தில்கலக்கலாக நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இரு படங்களையும் தனுஷ் ரொம்பவே எதிர்பார்த்துக்கொண்டுள்ளார்.இதில் பரட்டை படம் தான் தனுஷுக்கு ரொம்ப பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இது சூப்பர்மாமனார் ரஜினி பரிந்துரைத்த படமாச்சே. கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற ஜோகிதான் தமிழில் பரட்டையாகமாறியுள்ளது.இந்த படங்களைத் தவிர அடுத்து சேலம் சந்திரசேகர் தயாரிப்பில் இன்னொரு படத்திலும் நடிக்கவுள்ளார் தனுஷ்.பாலு மகேந்திராவின் உதவியாளர் வெற்றிதான் இப்படததை இயக்கவுள்ளார். படத்திற்கு தேசிய நெடுஞ்சாலைஎன பெயரிட்டுள்ளனர்.ஏற்கனவே இந்த சந்திரசேகர் தனுஷை வைத்து சுள்ளான் என்ற மாபெரும் தோல்விப் படத்தைக் கொடுத்தவர்என்பது நினைவிருக்கலாம். அப்படி இருந்தும் கூட மீண்டும் தனுஷை வைத்து அவர் படம் எடுப்பதுகோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இருந்தாலும் தனுஷ் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக கூறுகிறார் சந்திரசேகர்.கஜினி படத்தையும் இவரேதான் தயாரித்தார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருப்பவர் பற்றித் தான்இந்த செய்தியே. டெல்லியிலிருந்து வந்துள்ள குளு குளு பாதுஷா கீரத் தான் தனுஷுடன் ஜோடி போடப்போகிறவர். எங்கேயோ கேட்ட பெயர் மாதிரியே இருக்கிறதா?வட்டாரம் படத்தில் ஆர்யாவுடன் அட்டகாசம் செய்திருப்பவர் இதே கீரத்தான். சரணின் கண்டுபிடிப்பான கீரத்,படு கில்மாவாக இருக்கிறார். வாட்ட சாட்டமாக, புஷ்டியாக இருக்கும் கீரத்தை, குச்சி ஐஸ் போல இருக்கும்தனுஷுடன் ஜோடி போட்டுள்ளார்களே என்று இயக்குனர் வெற்றியிடம் கேட்டால், வெளியில் பார்க்காதீர்கள்,உள்ளே என்ன சரக்கு உள்ளது என்று மட்டும் பாருங்கள் என்கிறார்.குளிர் நிலவான கீரத்துக்கு இது இரண்டாவது தமிழ்ப படம், அதுவும் சூப்பர் ஸ்டாரின் மருமகனுடன் என்பதால்,மறு பேச்சு பேசாமல் கால்ஷீட் கொடுத்து விட்டாராம். சம்பளத்தைக் கூட நீங்களே நிர்ணயித்துக் கொள்ளுங்கள்,தனுஷுடன் நிறைய டூயட் மட்டும் மறக்காமல் வைத்து விடுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொண்டாராம்.கீரத்தும், தனுஷும் இணையப் போகும் இந்த தேசிய நெடுஞ்சாலை படத்திற்கு முதலில் என்.எச்.47 என்று தான்பெயர் வைத்திருந்தனர். ஆனால் தமிழில் பெயர் வைத்தால் டாக்ஸ் ப்ரீ கிடைக்குமே என்பதால் அவசரம்அவசரமாக தேசிய நெடுஞ்சாலை என ஆக்கி விட்டனர்.நல்ல ரோடா போடுங்கப்பா!

By Staff
திருவிளையாடல், பரட்டை என்கிற அழகுசுந்தரம் என மீண்டும் பிசியாக ஆரம்பித்திருக்கும் தனுஷ் நடிக்கும்இன்னொரு படத்தில் டெல்லியிலிருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகியுள்ள குல்பி ஐஸ் கீரத் ஜோடியாகநடிக்கிறாராம்.

ஒரே படம் மூலம் டாப் கியருக்குப் போன தனுஷ், 3 படங்களை முடித்தவுடன் அதே வேகத்தில் கீழே போய்விட்டார். இப்போது மீண்டும் தனுஷ் பக்கம் அதிர்ஷ்டக் காத்து வீச ஆரம்பித்திருக்கிறது.

ஷ்ரேயாவுடன் திருவிளையாடல், மீரா ஜாஸ்மினுடன் பரட்டை என்கிற அழகுசுந்தரம் என ஒரே நேரத்தில்கலக்கலாக நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இரு படங்களையும் தனுஷ் ரொம்பவே எதிர்பார்த்துக்கொண்டுள்ளார்.

இதில் பரட்டை படம் தான் தனுஷுக்கு ரொம்ப பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இது சூப்பர்மாமனார் ரஜினி பரிந்துரைத்த படமாச்சே. கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற ஜோகிதான் தமிழில் பரட்டையாகமாறியுள்ளது.

இந்த படங்களைத் தவிர அடுத்து சேலம் சந்திரசேகர் தயாரிப்பில் இன்னொரு படத்திலும் நடிக்கவுள்ளார் தனுஷ்.பாலு மகேந்திராவின் உதவியாளர் வெற்றிதான் இப்படததை இயக்கவுள்ளார். படத்திற்கு தேசிய நெடுஞ்சாலைஎன பெயரிட்டுள்ளனர்.

ஏற்கனவே இந்த சந்திரசேகர் தனுஷை வைத்து சுள்ளான் என்ற மாபெரும் தோல்விப் படத்தைக் கொடுத்தவர்என்பது நினைவிருக்கலாம். அப்படி இருந்தும் கூட மீண்டும் தனுஷை வைத்து அவர் படம் எடுப்பதுகோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தாலும் தனுஷ் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக கூறுகிறார் சந்திரசேகர்.

கஜினி படத்தையும் இவரேதான் தயாரித்தார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருப்பவர் பற்றித் தான்இந்த செய்தியே. டெல்லியிலிருந்து வந்துள்ள குளு குளு பாதுஷா கீரத் தான் தனுஷுடன் ஜோடி போடப்போகிறவர். எங்கேயோ கேட்ட பெயர் மாதிரியே இருக்கிறதா?

வட்டாரம் படத்தில் ஆர்யாவுடன் அட்டகாசம் செய்திருப்பவர் இதே கீரத்தான். சரணின் கண்டுபிடிப்பான கீரத்,படு கில்மாவாக இருக்கிறார். வாட்ட சாட்டமாக, புஷ்டியாக இருக்கும் கீரத்தை, குச்சி ஐஸ் போல இருக்கும்தனுஷுடன் ஜோடி போட்டுள்ளார்களே என்று இயக்குனர் வெற்றியிடம் கேட்டால், வெளியில் பார்க்காதீர்கள்,உள்ளே என்ன சரக்கு உள்ளது என்று மட்டும் பாருங்கள் என்கிறார்.

குளிர் நிலவான கீரத்துக்கு இது இரண்டாவது தமிழ்ப படம், அதுவும் சூப்பர் ஸ்டாரின் மருமகனுடன் என்பதால்,மறு பேச்சு பேசாமல் கால்ஷீட் கொடுத்து விட்டாராம். சம்பளத்தைக் கூட நீங்களே நிர்ணயித்துக் கொள்ளுங்கள்,தனுஷுடன் நிறைய டூயட் மட்டும் மறக்காமல் வைத்து விடுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொண்டாராம்.

கீரத்தும், தனுஷும் இணையப் போகும் இந்த தேசிய நெடுஞ்சாலை படத்திற்கு முதலில் என்.எச்.47 என்று தான்பெயர் வைத்திருந்தனர். ஆனால் தமிழில் பெயர் வைத்தால் டாக்ஸ் ப்ரீ கிடைக்குமே என்பதால் அவசரம்அவசரமாக தேசிய நெடுஞ்சாலை என ஆக்கி விட்டனர்.

நல்ல ரோடா போடுங்கப்பா!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X