»   »  இடை + எடையை குறைத்த கீர்த்தி!

இடை + எடையை குறைத்த கீர்த்தி!

Subscribe to Oneindia Tamil

உடல் எடை பிளஸ் இடை அளவைக் குறைத்து படு ட்ரிம்மாக மாறியுள்ளார் கீர்த்திசாவ்லா.

அனாமிகாவுடன் கொஞ்ச காலத்திற்கு முன் கிசுகிசு பிளஸ் சர்ச்சையில் சிக்கிய ஸ்டண்ட்மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் தனது மகன் சிரஞ்சீவியை ஹீரோவாக்கியுள்ளார்.

சூர்யா என பெய>டப்பட்டுள்ள இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்கீர்த்தி சாவ்லா. ஹீரோயினைத் தேடி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம். பல முன்னணி நடிகைகளைக் கேட்டு கடைசியில் கீர்த்தி தான்தகைந்தாராம்.

இதையடுத்து ஷூட்டிங்கைத் தொடங்கியுள்ளனர். கீர்த்திக்கு இப்படத்தில் போலீஸ்ஆபிஸர் வேடம். இதற்காக உடல் எடையை கொஞ்சம் போல குறைத்தால் நல்லதுஎன்று கூறவே தட்டாமல் தனது உடல் எடையைக் குறைத்துள்ளார் கீர்த்தி.

உடல் எடையோடு, இடை அளவையும் வாலண்டியராக குறைத்து படு ட்ரிம்மாகமாறியுள்ளார். போலீஸ் உடையில் கீர்த்தியைப் பார்க்கும் போது ஜம்மென்றுஇருக்கிறார்.

இப்படத்திலும் கிளாமர் இருக்கிறதாம். ஆணை படத்தின் மூலம் நடிக்க வந்தகீர்த்திக்கு, கையில் போதிய அளவு படம் இல்லை என்பதால் சூர்யா மூலம்ரசிகர்களுக்கு செம விருந்து கொடுக்க காத்திருக்கிறாராம். நடிப்போடு, கிளாமர் பிளஸ்ஆக்ஷனிலும் இப்படத்தில் அசத்துகிறாராம்.

வெறும் கிளுகிளுப்பு நடிகையாக மட்டுமல்லாமல் எனக்கு நன்றாக நடிக்க வரும்என்பதையும் இந்த சூர்யா நிரூபிக்கும் என்று நெஞ்சைத் தட்டித் தைரியமாகசொல்கிறார் கீர்த்தி.

Read more about: keerthi chanwla in surya
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil