»   »  உருண்ட உதடு, மருண்ட ஹீரோ!

உருண்ட உதடு, மருண்ட ஹீரோ!

Subscribe to Oneindia Tamil

உதட்டோடு உதடு பொருத்தும் லிப் லாக் காட்சியில் அடுத்தடுத்து டேக் வாங்கி தொடர் முத்தம் கொடுத்து நடித்த சூர்யா பட நாயகனும், ஸ்டண்ட்மாஸ்டர் ஜாகுவார் தங்கத்தின் மகனுமான சிரஞ்சீவி, கடைசியில் மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.

ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கத்தின் மகன் விஜய சிரஞ்சீவி. மகனை ஹீரோவாகப் போட்டு படத்தையும் இயக்கி வருகிறார் ஜாகுவார். படத்துக்குப்பெயர் சூர்யா. சிரஞ்சீவிக்கு ஜோடி போட்டிருப்பவர் கீர்த்தி சாவ்லா.

படம் பையப் பைய வளர்ந்து வருகிறது. சமீபத்தில் ஒரு ஹாட்டான காட்சியை படமாக்கினார் ஜாகுவார். படு விசேஷமான காட்சி இது. அதாவது வளவளவென்று பேசிக் கொண்டிருக்கும் ஹீரோயினின் வாயை அடைக்க, பச்செக்கென பக்கத்தில் இழுத்து வாயோடு வாய் வைத்து வல்லிய முத்தம்ஒன்றைக் கொடுக்கிறார் ஹீரோ.

படத்துக்கு இந்தக் காட்சி ரொம்ப ரொம்ப முக்கியம் என்று கீர்த்தியிடம் கூறி, இந்தக் காட்சிக்கு அவரிடமிருந்து ஒப்புதலையும் வாங்கி விட்டார்ஜாகுவார். கீர்த்திக்கு இந்த முத்தமெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது. இதை விட கிக்கான காட்சிகளில் நடித்த தித்திப்பு அனுபவம் இருந்ததால்,ஜமாய்ச்சுடலாம் ஜாகுவார் சார் என்று முண்டா தட்டி, உதட்டை ரெடி செய்து காத்திருந்தார்.

ஆனால் தம்பி சிரஞ்சீவிக்குத்தான் கனுக்கால் முதல் தலை முடி வரை தடதடவென நடுக்கம் ஆகி விட்டதாம். உம்மா கொடுப்பது புதுசு என்பதால்நடுங்கியுள்ளார். ஆனால் ஜாகுவார் தைரியம் கொடுத்து தயங்காமல் போ தம்பி, தளராமல் குடு எம்பி (ஹீரோயினை விட தம்பி கொஞ்சம் போலஉசரம் குறைவாம்) என்று அனுப்பி வைத்தாராம்.

சரி, வருவது வரட்டும் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு டேக்குக்குக் கிளம்பினார் சிரஞ்சீவி. முதலில் கொடுத்த முத்தம், சரிவரவில்லையாம். இதையடுத்து இன்னொரு டேக் போனார்கள். இதுவும் சரிப்பட்டு வரவில்லை.

சிரஞ்சீவியின் கூச்சம், நடுக்கத்தால் இப்படி ஒவ்வொரு டேக்காக உயர்ந்து 11 டேக்குகள் வரை வந்து விட்டதாம். ஒவ்வொரு முறையும் அழுத்தம்திருத்தமாக உம்மா கொடுத்து வந்ததால் சிரஞ்சீவிக்கு வாய் வலித்துப் போய் விட்டதாம்.

கடைசியாக 11வது டேக்கில் முத்தம் ஓ.கே.வானது. ஆனால் சிரஞ்சீவிதான் டயர்ட் ஆகி சோர்வில் மயக்கம் போட்டு விட்டாராம். கீர்த்தியின் உதடுஉருட்டலில் சிரஞ்சீவி மருண்டு போய் விட்டாரோ என்னவோ!

பயந்து போன யூனிட்டார், முகத்தில் சோடா தெளித்து எழுப்பி உட்கார வைத்து என்னப்பா இதுக்கே மயக்கடிச்சுட்டே என்று கூறிஆசுவாசப்படுத்தினார்களாம்.

மயக்கம் தெளிந்தும் கூட சிரஞ்சீவிக்கு வெட்கம் போகவில்லையாம். கீர்த்தியைப் பார்க்கவே வெட்கப்பட்டு முகத்தை அந்தாண்டை திருப்பியபடியேஇருந்ததால் இதுக்கு மேலயும் தம்பியை தத்தளிக்க விட வேண்டாம் என்று முடிவு செய்து பேக்கப் சொன்னாராம் ஜாகுவார்.

நடந்தது என்ன என்பது குறித்து பின்னர் ஜாகுவார் நம்மிடம் கூறுகையில், பையனுக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம். என் முன்னாடி முத்தம் கொடுக்கும்காட்சியில் நடிக்க ரொம்ப பயந்து விட்டான். இதனால் நான் ஸ்பாட்டில் இருக்கவில்லை, அசிஸ்டன்ட்டுகளிடம் சொல்லி விட்டு வெளியே வந்துவிட்டேன். அப்படியும், பயந்து போய் மயக்கம் போட்டுட்டான். சரியாப் போயிடும் என்றார் சிரித்துக் கொண்டே.

வளவளவென்று பேசும் பாட்டிகளுக்கும் இப்படிப்பட்ட காட்சியை வைப்பார்களா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil