கீர்த்தி சுரேஷ் முதல் பிரிகிடா வரை.. இந்த ஆண்டு ‘A' சான்றிதழ் படங்களில் மிரட்டிய டாப் 5 நடிகைகள்!
சென்னை: 2022ம் ஆண்டு தமிழ் சினிமாவில் சில 'A' சான்றிதழ் படங்களும் வெளியாகி உள்ளன. அதில் குறிப்பாக பல முன்னணி நடிகைகளே நடித்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ஆண்ட்ரியா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும், துஷாரா விஜயன், பிரிகிடா, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட இளம் நடிகைகளும் 18 வயதுக்கு மேற்பட்ட ரசிகர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய படங்களில் நடித்துள்ளனர்.
கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்திற்காக இந்த நடிகைகள் போல்டாக நடித்தது ரசிகர்களை இந்த ஆண்டு ரொம்பவே வியக்க வைத்துள்ளது.

சம்யுக்தா ஹெக்டே - மன்மத லீலை
இன்ஸ்டாகிராமிலேயே வெறும் தாங் உடையுடன் ஹாட்னஸை கூட்டும் சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படம் மன்மத லீலை. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் இந்த படத்தில் நாயகனாக நடித்திருந்தார். ஏ சான்றிதழ் பெற்ற இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடிகளாக சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் உள்ளிட்ட மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தனர். ஆனால், இதில், சம்யுக்தா ஹெக்டே படு போல்டாக நடித்து மற்ற இருவரை ஓவர்டேக் செய்துள்ளார்.

துஷாரா விஜயன் - நட்சத்திரம் நகர்கிறது
ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தில் சேலை கட்டிய மாரியம்மாளாக நடித்த துஷாரா விஜயன் இந்த ஆண்டு மீண்டும் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ரெனே எனும் படு போல்டான பெண்ணியவாதி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். காளிதாஸ் ஜெயராம் உடன் இவர் படு தாராளமாக நடித்த காட்சிகள் ரசிகர்களை தூங்க விடாமல் செய்தது.

ஆண்ட்ரியா - அனல் மேலே பனித்துளி
ஆண்ட்ரியா நடிப்பில் ஓடிடியில் வெளியான அனல் மேலே பனித்துளி திரைப்படத்துக்கும் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆண்ட்ரியாவை மூன்று போலீஸ் அதிகாரிகளே பலாத்காரம் செய்வதும், அவர்கள் மீது புகார் அளிக்க வரும் இடத்தில் மீண்டும் அவர்களிடம் சிக்கி ஆடைகள் அவிழ்க்கப்பட்டு வீடியோ எடுத்து மிரட்டுவதுமாக உருவாகிய அனல் மேலே பனித்துளி படத்தில் மானம் என்பது வாழும் வாழ்க்கையில் தான் உள்ளது என போல்டாக வசனம் பேசி நடித்திருப்பார் ஆண்ட்ரியா. பிசாசு 2 இந்த ஆண்டு வரும் என பெரிதும் எதிர்பார்த்த நிலையில், கடைசி வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிகிடா - இரவின் நிழல்
இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்த சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படமான இரவின் நிழல் படத்துக்கும் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தில் ஏகப்பட்ட நிர்வாணக் காட்சிகளை வைத்து தணிக்கை குழுவையே தடுமாற வைத்தார் பார்த்திபன். அதிலும், ஆடையே இல்லாமல் இளம் நடிகை பிரிகிடா நடித்த அந்தக் காட்சி ரசிகர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது. ஆனால், அந்த காட்சியில் தான் ஆடை அணிந்திருந்ததாகவும் அது ஒரு சீட் ஷாட் என்றும் பிரிகிடா விளக்கம் கொடுத்திருந்தார்.

கீர்த்தி சுரேஷ் - சாணிக் காயிதம்
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் வெளியான சாணிக் காயிதம் படம் இந்த ஆண்டு ஓடிடியில் வெளியானது. பொன்னி கதாபாத்திரத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்த கீர்த்தி சுரேஷை வில்லன் ஆட்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரியே பாலியல் பலாத்காரம் செய்வதும், அவர் முகத்தையே சிதைக்கும் காட்சிகள் பார்க்கவே படு பயங்கரங்கமாக எடுக்கப்பட்டு இருந்தது. வில்லன்களை வேட்டையாடும் நாயகியாக மாறி கீர்த்தி சுரேஷ் தனது படு போல்டான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருப்பார்.


Click it and Unblock the Notifications