அப்பா முஸ்லிம், அம்மா இந்து.. 17வயதில் 4வது பொண்டாட்டி.. சாவுக்கு கூட போகல.. அஞ்சுவின் கண்ணீர் கதை!
சென்னை: ஒரு சில நடிகைகள் மறக்கவே முடியாத கதாபாத்திரங்களை நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுவார்கள். அப்படி குழந்தை நட்சத்திரமா நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை அஞ்சு. 1970ல் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கிய பேபி அஞ்சு, தமிழ் மட்டுமில்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கொடிகட்டி பறந்த இவர், வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவால், 17 வயதிலேயே வாழ்க்கையை தொலைந்துவிட்டு தற்போது வரை கண்ணீருடன் வாழ்த்து வருகிறார். அவருடைய கண்ணீர் கதையை தான் இந்த செய்தியில் பார்க்கலாம்.
நடிகை அஞ்சு 1975ம் ஆண்டு மார்ச் மாதம், முஸ்லிம் தந்தைக்கும், இந்து தாய்க்கும் மகளாக பிறந்த இவர். பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். குழந்தை அஞ்சுவை கடைத்தெருவில் பார்த்த மகேந்திரன் தன்னுடைய படத்தில் நடிக்க அழைத்துள்ளார். நடிப்பு என்றால் என்னவென்று தெரியாத குடும்பம் என்பதால், முதலில் முடியாது என்றுள்ளார் அஞ்சுவின் அம்மா. பின் இயக்குநர் மகேந்திரன் பேசி, அஞ்சுவை உதிரிப்பூக்கள் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் கோகிலா, பொல்லாதவன் என 40க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். மலையாளம். தமிழ், தெலுங்கு, கன்னட என பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அஞ்சு, இயக்குனர் வசந்த் இயக்கிய கேளடி கண்மணி பட ஹீரோயினாக, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகளாக நடித்திருப்பார்.

17 வயதில் 4வது மனைவி: 1996 ஆம் ஆண்டு தெலுங்கு பட நடிகர் டைகர் பிரபாகரை காதலித்த போது அஞ்சுக்கு வயது 17. டைகருக்கு வயது 48. தனது 52வது வயதில் 2001ஆம் ஆண்டு டைகர் பிரபாகரன் மரணமடைந்தார். டைகர் பிரபாகரனுடன் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார் அஞ்சு. திருமணமாகி வீட்டிற்கு சென்ற போது தான், அவருக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடந்து இருப்பது. அவரின் பிள்ளைகள், தன்னை விட வயதில் மூத்தவர்கள் என்றும், கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டு இருப்பதும் தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இருந்த போதும், இது நாமே தேடிக்கொண்ட வாழ்க்கை என்று எல்லாவற்றையும் சமாளித்து வாழ்க்கை நடத்தி கர்ப்பமாக இருந்தபோது டைகர் பிரபாகருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிந்து மனமுடைந்து அவரைவிட்டு விவாகரத்து பெற்று பிரித்தார்.
மகனுக்காக விலகினார்: விவாகரத்து பெற்ற பின் சினிமாவில் வாய்ப்பு தேடிய அஞ்சுக்கு வாய்ப்பு சரியாக அமையாததால் சீரியலில் நடித்தார். ராதிகாவின் சித்தி சீரியல் தான் அவர் நடித்த முதல் சீரியல். அதன் பிறகு கிருஷ்ணா தாசி, அகல்விளக்கு, செல்வி, அரசி ஆகிய தமிழ் சீரியல்களில் நடித்தார். தமிழில் கடைசியாக மதயானை கூட்டம் படத்தில் நடித்த பிறகு சினிமாவில் இருந்து விலகி தன் மகன் அர்ஜூனை கண்ணும் கருத்துமாக வளர்த்துள்ளார். தற்போது, அஞ்சுவின் மகன் அர்ஜூன் கல்லூரிக்கு செல்வதால் மீண்டும் சீரியலில் நடித்து வருகிறார்.
சாவுக்கு கூட போல: அண்மையில் அவர் அளித்த பேட்டியில், 17 வயதில் நான், தவறான ஒரு முடிவை எடுத்தேன். திருமணமான பிறகு தான் அவருக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி இருப்பதும், நான்காவதாக அவர் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதும் தெரிந்தது. அதைக்கேட்டு மிகவும் உடைந்து போனேன். அதுமட்டுமல்லாமல் அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிந்தும் அந்த வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். அதன் பின், என் கணவர் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. அந்த சாவுக்கு கூட நான் அந்த வீட்டிற்கு செல்லவில்லை. என் மகனுக்கு இவர் தான் உன் அப்பா, அப்பா நடித்த படங்கள் இது என்று நான் காட்டியதே இல்லை. என் மகனுக்கு நான் மட்டும் தான் அப்பா, அம்மா எல்லாம் என்று உருக்கமாக கண்கலங்கி பேசினார் நடிகை அஞ்சு. குழந்தை நட்சத்திரமாக நடித்து மிகப்பெரிய உச்சத்தை அடைய இருந்த நடிகை, தன்னுடைய தவறான முடிவால் 17 வயதிலேயே வாழ்க்கையை தொலைத்து விட்டு தற்போது வரை தன்னுடைய மகனுக்காக போராடி வருகிறார்.


Click it and Unblock the Notifications











