பிச்சைக்காரன் மாதிரி உக்காந்திருக்கான்... கருணாஸ் மகன் யாரிடம் இப்படி திட்டு வாங்கினார் தெரியுமா?

சென்னை: அசுரன் படம் மூலம் பிரபலமடைந்த நடிகர் கருணாஸின் மகன்தான் கென் கருணாஸ்.

அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு நிகரான கதாபாத்திரம் கென்னுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் முன்னதாக கொடுத்த நகைச்சுவையான பேட்டி ஒன்று தற்சமயம் வைரலாகியுள்ளது.

அசுரன்

அசுரன்

வட சென்னை திரைப்படத்தின் படப்பிடிப்பின்போதே கென்னிடம்,"நான் அடுத்ததாக இயக்கப் போகும் படத்தில் நீ நடிக்கிறாய்" என்று கூறினாராம் இயக்குநர் வெற்றிமாறன். அதற்காக உடல் எடையையும் குறைக்கச் சொன்னாராம். கிட்டத்தட்ட ஓராண்டு உடல் எடையை குறைத்து படப்பிடிப்பு துவங்காததால் மீண்டும் எடை கூடிவிட்டாராம். அதன் பிறகு அசுரன் தொடங்கப்படும் நேரத்தில் மீண்டும் அழைத்த வெற்றிமாறன் கென்னை பார்த்தவுடன்,"ஏன் மீண்டும் குண்டாகிவிட்டாய்" என்று கேட்டுவிட்டு 15 நாட்கள்தான் நேரம் இருக்கிறது. உடம்பை குறைத்தால்தான் நீ நடிக்க முடியும் என்று நிபந்தனை போட, 15 நாட்களில் 10 கிலோ குறைத்ததாக கென் கூறியுள்ளார்.

 திரையரங்கில் விழுந்த திட்டு

திரையரங்கில் விழுந்த திட்டு

படம் ரிலீஸ் ஆனவுடன் திரையரங்கில் தனது அம்மா மற்றும் சகோதரியுடன் படம் பார்க்கும்போது இடைவேளை காட்சிக்கு முந்தைய சீனில் தனுஷுக்கு தெரியாமல் முயல் பிடிக்க செல்வார் கென். அந்தக் காட்சி ஓடும்போது கென் பக்கத்தில் அமர்ந்திருந்தவர், இதோ சும்மாவே இருக்க மாட்டான். முயல புடிக்கப் போறேன் மயிற புடிக்கப் போறேன்னு கெளம்பிடுவான் என்று திரையை பார்த்து திட்டினாராம். பிறகு இடைவேளையில் கென்னை பார்த்த அந்த நபர், தம்பி நீங்கதானா அது? நல்லா நடிச்சிருக்கீங்க என்று பாராட்டினாராம்.

 கருணாஸுக்கும் திட்டு

கருணாஸுக்கும் திட்டு

அதேபோல இன்னொரு முறை கருணாஸுடன் சேர்ந்து குடும்பமாக படம் பார்க்க சென்றிருந்தபோது கிளைமாக்ஸ் காட்சியில் மீண்டும் தனுஷிற்கு தெரியாமல் கென் தனியாக செல்வார். அப்போதும் ஒரு நபர் டேய் லொடுக்கு பாண்டி மவனே சும்மாவே இருக்க மாட்டியாடா, தனியா தனியா போய்கிட்டு இருக்க என்று திட்டினாராம். தன்னைத்தான் கூப்பிடுகிறார் என்று,"என்னங்க என்னங்க சொன்னீங்க" என்று அந்த நபரிடம் கருணாஸ் கேட்கப் போக இவர்கள் அமைதியாக உட்கார வைத்தார்களாம்.

 பீட்டர் ஹெயின்

பீட்டர் ஹெயின்

சண்டைக்காட்சியின் படப்பிடிப்பின் போது ஒரு நாள் பீட்டர் கென்னை அழைத்து இதை பார் என்று சொல்ல, அவருடைய அசிஸ்டன்டுகள் ஒரு நபரை போட்டு அடித்தார்களாம். உடனே கென் நல்லா இருக்கு சார் என்று சொல்ல, தம்பி நல்லா இருக்கா நீ தாம்பா இத பண்ணணும் என்று அதட்டுவது போல கூறி நடிக்க வைத்தாராம். அன்று இரவு அசதியாக கென் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டிருக்க, இயக்குநர் வெற்றிமாறன், என்ன கென் தூங்கிட்டு இருக்கியா என்று கேட்க உடனே பீட்டர் ஹெயின்,"அவனுக்கு என்ன சார் சப்ளைங்கால் போட்டு பிச்சைக்காரன் மாதிரி உக்காந்துட்டு இருக்கான்" என்று கலாய்த்தாராம். படம் ஷூட்டிங் முழுக்க பீட்டர் மாஸ்டர் தன்னை கலாய்த்து கொண்டே இருந்தார் என்று கென் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X