‘கேஜிஎஃப் 2’ படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸ் ... "ஆர்ஆர்ஆர்" மற்றும் "வலிமை" படத்திற்கு சவால்
சென்னை : 'தன்னைத்தானே செதுக்கியவன்' என்ற வரிகள் தமிழ் சினிமாவில் எப்படி அஜித்துக்கு பொருந்துகிறதோ, அப்படியே கன்னட நடிகர் யாஷ்ஷுக்கும் பொருந்தும்.
சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்து இன்று கன்னட ரசிகர்கள் மட்டுமல்லாமது தென்னிந்திய ரசிகர்களிடமும் கவனம் ஈர்த்த நடிகராக உயர்ந்திருக்கார்
'கேஜிஎஃப் 2' படத்தின் வெளியீட்டையொட்டி தேசிய விடுமுறை அளிக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதிய வெறித்தனமான ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் யாஷ் இன்று தனது 36வது பிறந்தநாளைக் கொண்டாடுறார்.

மிகவும் முரட்டுத்தனமான
இதனையொட்டி, அவரது ரசிகர்கள் காமன் டிபி வெளியிட்டு பிறந்தநாள் அப்டேட்டை எதிர்பார்த்திருக்கும் நிலையில், இன்று 'கேஜிஎஃப் 2' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ட்ரெண்டாகி வருது.கேஜிஎஃப் படத்திற்கு பிறகு பல தெலுங்கு சினிமாவும் கன்னட சினிமாவும் அதே போன்ற பல முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர். மிகவும் முரட்டுத்தனமான ரகுடு (rugged ) ஃபீலிங் கொடுக்கும் கதாநாயகர்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றனர்.

இசை மற்றும் வசனங்கள்
இருந்தாலும் கூட கேஜிஎஃப் ஏற்படுத்திய தாக்கம் மற்ற படங்கள் ஏற்படுத்தவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணம் கதாநாயகன் மீது கொண்ட தனிப்பட்ட ரசிகர்களின் அபிப்ராயம். இன்னொரு பக்கம் கேஜிஎப் படத்தின் பின்னணி இசை மற்றும் வசனங்கள் மிகப் பெரிய அழுத்தத்தை கொடுத்தது. சமூகத்தில் நடக்கும் அவலங்களை சுட்டிக் காட்டும் விதமாகவும் ஒரு தனி மனிதன் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் எப்படி எல்லாம் முன்னுக்கு வரவேண்டும் என்பதை தைரியமான ஒரு சாமானியன் கதாநாயகனாக மாறும் தருணம் கேஜிஎப் மூலம் பிரதிபலித்தது .

"ஆர்ஆர்ஆர்" மற்றும் வலிமை
முதல் பாகம் ரிலீஸாகி நீண்ட இடைவெளி ஆனபிறகும் கூட இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்து கொண்டே இருக்கிறார்கள். தெலுங்கு சினிமாவில் ஒருபக்கம் "ஆர் ஆர் ஆர்" படத்தின் எதிர்பார்ப்பு பான் இந்தியா திரைப்படமாக மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் நடிகர் அஜித் நடித்த வலிமை படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு ஒருநாள் கூட குறைந்தபாடில்லை. இந்த இரண்டு படங்களுக்கும் சவால் விடும் விதமாக கன்னட சினிமாவில் கேஜிஎப் திரைப்படம் எல்லா போட்டிகளிலும் வரிசைகட்டி நின்று கொண்டிருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

அளவில்லா அன்பும் பாசமும்
இந்தப் கேஜிஎப் படத்தின் ஸ்டண்ட் கலைஞர்கள் அன்பு அறிவு தேசிய அங்கீகாரம் பெற்றதுடன் இந்த படத்திற்குப் பிறகு பல வித்தியாசமான படங்களில் சண்டை பயிற்சியை மேற்கொண்டார்கள் என்பதுதான் உண்மை. இதே தருணத்தில் அந்த ஸ்டண்ட் கலைஞர்கள் ஆக இருக்கக் கூடிய அன்பு அறிவு இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நடிகர் யாஷ் பிறந்த நாளான இன்று சமூக வலைதளங்களில் கேஜிஎப் படத்தின் ரசிகர்கள் யஷ் மீது கொண்ட அளவில்லா அன்பும் பாசமும் மிகுதியாக நிறைய புதுப்புது போஸ்டர்களை உருவாக்கி ஷேர் செய்து வருகின்றனர். நிறைய சினிமா பிரபலங்கள் நடிகர் யாஷ் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களும் கூறி வருகின்றனர். விரைவில் வித்தியாசமான பல திரைப்படங்கள் நடித்து 2022-ல் வெளிவரும் என்று யாஷ் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











