»   »  கஸ்தூரி ராஜா படத்திற்கு எதிர்ப்பு

கஸ்தூரி ராஜா படத்திற்கு எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

கஸ்தூரி ராஜாவின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இது காதல் பருவம் படம் படு ஆபாசமாகஇருப்பதாகவும், இப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரி சேலத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்தின்போது படத்தின் சுவரொட்டிகள் தீவைத்துகொளுத்தப்பட்டன. கிரணை நாயகியாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் இது காதல் வரும் பருவம். இதன்ஹீரோ புதுமுகம் ஆவார்.

இப்படத்தின் சுவரொட்டிகள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. படு கிக்கான காட்சிகளுடன் கூடிய இந்தசுவரொட்டிகளுக்கு மகளிர் அமைப்புகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் இப்படம் ஆபாசமாக இருப்பதாகவும், மாணவ, மாணவியர் மனதில் மோசமான எண்ணத்தைவிதைக்கும் வகையில் படம் அமைந்துள்ளதாகவும் கூறி சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்புஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் ஜனநாயக மாதர் சங்கம், சிஐடியூ, முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின்பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். போராட்டம் நடத்தியவர்கள் படத்தின் சுவரொட்டிகளையும் தீயிட்டுக்கொளுத்தினர்.

இப்படத்தில் கிரண் படு கவர்ச்சியாக நடித்திருப்பது நினைவிருக்கலாம். அவரை விட வயதில் குறைந்தஹீரோவுடன் படு நெருக்கமான காட்சிகளில் பூந்து விளையாடி புயலெனப் பாய்ந்துள்ளார் கிரண்.

Please Wait while comments are loading...