twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிக்க போகும் கிரண்! திமிரு மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள கிரண் இம்முறை படு தெளிவாக இருக்கிறார்.ஜெமினி மூலம் தமிழுக்கு வந்த ராஜஸ்தான் லக லக குதிரை கிரண், கவர்ச்சியில் படுஆட்டம் போட்டவர். அவர் போட்ட ஓவர் ஆட்டமே, அவரது மார்க்கெட்டை இழுத்துமூடி விட்டது.கிரண் காட்டிய ஓவர் கிளாமர் ரசிகர்களுக்கும், ஹீரோக்களுக்கும், இயக்குனர்களுக்கும்திகட்டிப் போக யாரும் சீந்ததாத நாயகியாகி விட்டார் கிரண்.பொறுத்துப் பார்த்து விட்டு சொந்த ஊருக்கு பொட்டியைக் கட்டிய கிரண், திடீரெனகுத்துப் பாட்டுக்கு ஆட கோலிவுட் பக்கம் வந்தார்.விஜய் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்ட கிரண், இப்போது திமிரு படத்தில்விஷாலுடன் மதுரைக் குத்துக்கு மங்காத்தா போட்டுள்ளார்.தொடர்ந்து சிங்கிள் டான்ஸ் தானா என்று கிரணிடம் கேட்டபோது, வாய்ப்பே இல்லை.வெறும் கிளாமர் சரியாக இருக்காது என்பதை நான் உணர்ந்துள்ளேன்.இனிமேல் கிளாமரை பெரிதாக நம்பி நான் நடிக்க மாட்டேன். நன்கு நடிக்கக் கூடியவாய்ப்புடன் கிளாமர் என்றால்தான் இனிமேல் கால்ஷீட் தருவேன். எனக்கு கிளாமர் மட்டும்தான் தெரியும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அது தவறு. வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.அன்பே சிவம் படத்தில் நான் கமல் சாருடன் நடித்தபோது எனக்கு நல்லநடிப்பனுபவம் கிடைத்தது. அப்போதுதான் நம்மாலும் கிளாமர் இல்லாமல் நன்குநடிக்க முடியும் என்பதையே உணர்ந்தேன்.கமல் சார் நிறைய டிப்ஸ்கள் கொடுத்தார். அந்த ஒரு படமே, நடிப்பில் எம்.ஏ. பட்டம்வாங்கிய நிறைவை எனக்குக் கொடுத்தது.வெறுமனே அழகு பதுமையாக, கிளாமர் காட்டி வந்து போக எனக்கு விருப்பம்இல்லை. சவாலான கேரக்டர்கள் கிடைத்தால் வெளுத்துக் கட்டத் தயாராகஇருக்கிறேன். இனிலும் கிரண் ஒரு கிளாமர் பொம்மை அல்ல என்கிறார்.எதுவோ கெட்ட பிறகு என்னவோ நமஸ்காரம் என்பார்கள். அது கிரணுக்கு ரொம்பப்பொருந்தும்...

    By Staff
    |
    திமிரு மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள கிரண் இம்முறை படு தெளிவாக இருக்கிறார்.

    ஜெமினி மூலம் தமிழுக்கு வந்த ராஜஸ்தான் லக லக குதிரை கிரண், கவர்ச்சியில் படுஆட்டம் போட்டவர். அவர் போட்ட ஓவர் ஆட்டமே, அவரது மார்க்கெட்டை இழுத்துமூடி விட்டது.

    கிரண் காட்டிய ஓவர் கிளாமர் ரசிகர்களுக்கும், ஹீரோக்களுக்கும், இயக்குனர்களுக்கும்திகட்டிப் போக யாரும் சீந்ததாத நாயகியாகி விட்டார் கிரண்.

    பொறுத்துப் பார்த்து விட்டு சொந்த ஊருக்கு பொட்டியைக் கட்டிய கிரண், திடீரெனகுத்துப் பாட்டுக்கு ஆட கோலிவுட் பக்கம் வந்தார்.


    விஜய் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்ட கிரண், இப்போது திமிரு படத்தில்விஷாலுடன் மதுரைக் குத்துக்கு மங்காத்தா போட்டுள்ளார்.

    தொடர்ந்து சிங்கிள் டான்ஸ் தானா என்று கிரணிடம் கேட்டபோது, வாய்ப்பே இல்லை.வெறும் கிளாமர் சரியாக இருக்காது என்பதை நான் உணர்ந்துள்ளேன்.


    இனிமேல் கிளாமரை பெரிதாக நம்பி நான் நடிக்க மாட்டேன். நன்கு நடிக்கக் கூடியவாய்ப்புடன் கிளாமர் என்றால்தான் இனிமேல் கால்ஷீட் தருவேன். எனக்கு கிளாமர் மட்டும்தான் தெரியும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அது தவறு. வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.

    அன்பே சிவம் படத்தில் நான் கமல் சாருடன் நடித்தபோது எனக்கு நல்லநடிப்பனுபவம் கிடைத்தது. அப்போதுதான் நம்மாலும் கிளாமர் இல்லாமல் நன்குநடிக்க முடியும் என்பதையே உணர்ந்தேன்.

    கமல் சார் நிறைய டிப்ஸ்கள் கொடுத்தார். அந்த ஒரு படமே, நடிப்பில் எம்.ஏ. பட்டம்வாங்கிய நிறைவை எனக்குக் கொடுத்தது.


    வெறுமனே அழகு பதுமையாக, கிளாமர் காட்டி வந்து போக எனக்கு விருப்பம்இல்லை. சவாலான கேரக்டர்கள் கிடைத்தால் வெளுத்துக் கட்டத் தயாராகஇருக்கிறேன். இனிலும் கிரண் ஒரு கிளாமர் பொம்மை அல்ல என்கிறார்.

    எதுவோ கெட்ட பிறகு என்னவோ நமஸ்காரம் என்பார்கள். அது கிரணுக்கு ரொம்பப்பொருந்தும்...

      Read more about: kiran wats challenging roles
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X