கிரணுக்கு கெட்டி மேளம் கிரணுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்களாம். விரைவில் இவரும் சிம்ரனைப் போலவே வடநாட்டு நபரை கைப்பிடிக்க முடிவுசெய்துள்ளாராம்.தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று ஒரு ரவுண்டு வந்த கிரணின் நிலைமை இப்போது பரிதாபகரமாக உள்ளது. 4மொழிப்படங்களிலும் சுத்தமாக வாய்ப்புகள் மங்கியதால் தனது சொந்த ஊரான ஜெய்ப்பூருக்கு ஜூட் விட்டார்.அங்கு இந்திய உடைகளை வெளிநாடுகளுக்கும், வெளிநாட்டு உடைகளை இந்தியாவுக்கும் ஏற்றி இறக்கும் தொழில் செய்து வந்தஅவருக்கு அந்தத் தொழில் சீக்கிரமே போரடித்து விட்டது.இந்த கேப்பில் தான் நியூ படத்தில் மாமியாக வந்து கலக்கி விட்டுப் போனார். திருமலையில் விஜய்யுடன் ஒரு சிங்கிள்பாட்டுக்கும் ஆடி வைத்தார்.மேலும் சென்னைக்கு அடிக்கடி வந்து இயக்குனர்கள், தயாரிப்பு பார்ட்டிகளை கவனித்தும் வந்தார். நட்சத்திர ஹோட்டல்களில்தங்கியபடி கிரண் நடத்திய வேலை வாய்ப்பு தேடலுக்கு சில தெலுங்கு தயாரிப்பாளர்கள் மடங்கிவிட அங்கு சில படங்களில்நடித்தார்.இப்போது அதுவும் இல்லை. இதனால் நட்சத்திர ஹோட்டல்களில் ஆடிப் பாடும் வேலையில் இறங்கியுள்ளார்.இவரது பரிதாப நிலையை பார்த்த சுந்தர்.சி., தனது சின்னாவில் ஒரு குத்துப் பாட்டுக்கு வாய்ப்பளித்துள்ளார்.இந்தப் படத்தில் ஏற்கனவே அர்ஜூனுடன் ஸ்னேகா படு கவர்ச்சியாக நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.இப்போது கிரணும் களமிறங்கியிருக்கிறார்.இந்தப் படம் தவிர கிரணின் கையில் எந்த சினிமா வாய்ப்பும் இல்லை.இதனால் பேசாமல் கல்யாணம், கணவன் என செட்டிலாகி விடலாம் என்று தீர்மானித்துவிட்டாராம். தனது இந்த ஆசையைவீட்டிலுள்ளவர்களிடம் கூறியுள்ளார். கிரணை வைத்து வரும்படி பார்த்த அவர்களுக்கு இது ஷாக் ஆக இருக்கவே கொஞ்சம்பொறுக்கலாமே என்றிருக்கிறார்கள்.ஆனால், உடனே திருமணம் செய்து வைக்காவிட்டால் நடப்பதே வேறு என்று கிரண், மிரட்ட வேறு வழியில்லாமல் மகளுக்குமாப்பிள்ளை பார்க்கும் படலம் வேகமாக தொடங்கி விட்டதாம்.முதலில் அமெரிக்காவில் செட்டில் ஆன குஜராத்தி பிஸினஸ் மாப்பிள்ளைகளுக்குத் தான் வலை வீசியுள்ளார்களாம்.சிக்காவிட்டால் அடுத்த லிஸ்டில் இருப்பது வடநாட்டு தொழிலதிபர்கள். எங்கிருந்தாலும் வாழ்க!

By Staff

கிரணுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்களாம். விரைவில் இவரும் சிம்ரனைப் போலவே வடநாட்டு நபரை கைப்பிடிக்க முடிவுசெய்துள்ளாராம்.

தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று ஒரு ரவுண்டு வந்த கிரணின் நிலைமை இப்போது பரிதாபகரமாக உள்ளது. 4மொழிப்படங்களிலும் சுத்தமாக வாய்ப்புகள் மங்கியதால் தனது சொந்த ஊரான ஜெய்ப்பூருக்கு ஜூட் விட்டார்.

அங்கு இந்திய உடைகளை வெளிநாடுகளுக்கும், வெளிநாட்டு உடைகளை இந்தியாவுக்கும் ஏற்றி இறக்கும் தொழில் செய்து வந்தஅவருக்கு அந்தத் தொழில் சீக்கிரமே போரடித்து விட்டது.

இந்த கேப்பில் தான் நியூ படத்தில் மாமியாக வந்து கலக்கி விட்டுப் போனார். திருமலையில் விஜய்யுடன் ஒரு சிங்கிள்பாட்டுக்கும் ஆடி வைத்தார்.

மேலும் சென்னைக்கு அடிக்கடி வந்து இயக்குனர்கள், தயாரிப்பு பார்ட்டிகளை கவனித்தும் வந்தார். நட்சத்திர ஹோட்டல்களில்தங்கியபடி கிரண் நடத்திய வேலை வாய்ப்பு தேடலுக்கு சில தெலுங்கு தயாரிப்பாளர்கள் மடங்கிவிட அங்கு சில படங்களில்நடித்தார்.

இப்போது அதுவும் இல்லை. இதனால் நட்சத்திர ஹோட்டல்களில் ஆடிப் பாடும் வேலையில் இறங்கியுள்ளார்.

இவரது பரிதாப நிலையை பார்த்த சுந்தர்.சி., தனது சின்னாவில் ஒரு குத்துப் பாட்டுக்கு வாய்ப்பளித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஏற்கனவே அர்ஜூனுடன் ஸ்னேகா படு கவர்ச்சியாக நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.இப்போது கிரணும் களமிறங்கியிருக்கிறார்.

இந்தப் படம் தவிர கிரணின் கையில் எந்த சினிமா வாய்ப்பும் இல்லை.

இதனால் பேசாமல் கல்யாணம், கணவன் என செட்டிலாகி விடலாம் என்று தீர்மானித்துவிட்டாராம். தனது இந்த ஆசையைவீட்டிலுள்ளவர்களிடம் கூறியுள்ளார். கிரணை வைத்து வரும்படி பார்த்த அவர்களுக்கு இது ஷாக் ஆக இருக்கவே கொஞ்சம்பொறுக்கலாமே என்றிருக்கிறார்கள்.

ஆனால், உடனே திருமணம் செய்து வைக்காவிட்டால் நடப்பதே வேறு என்று கிரண், மிரட்ட வேறு வழியில்லாமல் மகளுக்குமாப்பிள்ளை பார்க்கும் படலம் வேகமாக தொடங்கி விட்டதாம்.

முதலில் அமெரிக்காவில் செட்டில் ஆன குஜராத்தி பிஸினஸ் மாப்பிள்ளைகளுக்குத் தான் வலை வீசியுள்ளார்களாம்.சிக்காவிட்டால் அடுத்த லிஸ்டில் இருப்பது வடநாட்டு தொழிலதிபர்கள்.

எங்கிருந்தாலும் வாழ்க!

Read more about: kiran to marry soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X