நல்லாசிரியர்களாக வந்த ரஜினி, கமல், மாதவன்

By Siva

சென்னை: ஆசிரியர் தினமான இன்று தமிழ் படங்களில் சிறந்த ஆசிரியர்களாக நடித்த நடிகர்கள், நடிகைகள் பற்றி பார்ப்போம்.

இந்தியாவின் 2வது குடியரசுத் தலைவாரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஒரு ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவர் ஆனவர் ராதாகிருஷ்ணன். அவரது பிறந்த நாள் அதாவது ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தில் தமிழ் சினிமாவில் என்றும் நம் நினைவில் நிற்கும் சில ஆசிரியர்களைப் பார்ப்போம்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

தர்மத்தின் தலைவன் படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்திருப்பார் ரஜினிகாந்த். ஞாபக மறதி இருந்தாலும் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுத்து நல்ல பெயர் எடுத்திருப்பார்.

கமல் ஹாஸன்

கமல் ஹாஸன்

கமல் ஹாஸன் நம்மவர் படத்தில் கல்லூரியின் துணை முதல்வராக நடித்திருப்பார். அவர் மாணவ, மாணவிகளுடன் ஒரு நண்பனைப் போன்று பழகி அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்.

மாதவன்

மாதவன்

லேசா லேசா படத்தில் மாதவன் பொறுப்புள்ள கல்லூரி பேராசிரியராக நடித்திருப்பார். கல்லூரியை மூடிவிட்டு அந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட மாணவர்களை தொடர் போராட்டத்தில் ஈடுபடச் செய்யும் பெரிய மனிதனை எதிர்த்து போராடுவார். மாணவ, மாணவியரின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பவராக மாதவன் நடித்திருந்தார்.

நதியா

நதியா

எம். குமரன், சன் ஆஃப் மகாலக்ஷ்மி படத்தில் நதியா கம்பீரமான கல்லூரி பேராசிரியையாக நடித்திருப்பார்.

ஜோதிகா

ஜோதிகா

காக்க காக்க படத்தில் மாணவ, மாணவியரின் மதிப்பிற்குரிய ஆசிரியையாக நடித்திருப்பார் ஜோதிகா. தனது மாணவி ஒருவருக்கு பிரச்சனை ஏற்பட்டபோது அதை தீர்த்து வைக்க அவர் போலீஸ் உதவியை நாடுவார்.

ஜெயபிரகாஷ்

ஜெயபிரகாஷ்

பசங்க படத்தில் அரசு பள்ளி ஆசிரியராக நடித்திருப்பார் ஜெயபிரகாஷ். என்ன தான் சொந்த பகை இருந்தாலும் அதை பள்ளியில் காட்டக் கூடாது என்பதையும், பெற்ற மகனாக இருந்தாலும் பள்ளியில் மாணவன் தான் என்பதையும் அழகாக புரிய வைத்திருப்பார்.

சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி

சாட்டை படத்தில் உருப்படாமல் இருந்த பள்ளியை சீர்திருத்தி ஒழுக்கம், கட்டுப்பாடு, கலைகள், விளையாட்டு என அனைத்திலும் மாவட்டத்திலேயே முதலாவது பள்ளியாக ஆக்குவார் ஆசிரியராக வந்த சமுத்திரக்கனி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X