ஜெயம் டூ கோமாளி … ஜெயம்ரவி தனிஒருவனாக கெத்துக்காட்டிய டாப் 5 திரைப்படங்கள்… பிறந்த நாள் ஸ்பெஷல் !

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

Recommended Video

Actress Mirnalini Ravi Speech | Jango movie Audio Launch | Filmibeat Tamil

அவருக்கு நெருங்கிய நண்பர்கள், ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஜெயம் ரவிக்கு நாமும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, அவர் நடிப்பில் ஹிட்டித்த டாப் 5 திரைப்படங்களை பற்றிப் பார்ப்போம்.

சிறப்பான அறிமுகம்

சிறப்பான அறிமுகம்

நடிகர் ஜெயம் ரவி, சதா, கோபிசந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2003 ஜூன் 21ல் வெளிவந்தது ஜெயம் படம். தெலுங்கில் எடுக்கப்பட்ட ஜெயம் படத்தின் ரீமேக்காக வெளிவந்த இந்த படம் ஜெயம் ரவியின் சகோதரர் மோகன் ராஜாவால் டைரக்ட் செய்யப்பட்டது. இருவருக்கும் இந்த படம் சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது.

அம்மா மகன் பாசம்

அம்மா மகன் பாசம்

2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, இப்படத்தில் ஜெயம் ரவி, நதியா மற்றும் அசின் நடித்திருந்தனர். மகன் அம்மாவிற்கு இடையே இருக்கும் பாசம், மகன் தந்தைக்கிடையே இருக்கும் புரிதல் என இரண்டு காட்சிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து திரைக்கதையில் சுவாரசியம் கொண்டு இயக்கியுள்ளார் இயக்குனர். இத்திரைப்படம் இல்லத்தரசிகளின் மனதை வென்ற ஒரு திரைப்படமாக அமைந்தது.

உழைப்பை கொட்டி நடித்தார்

உழைப்பை கொட்டி நடித்தார்

பேராண்மை பழங்குடி இன மக்களின் வாழ்க்கை முறையும், அவர்கள் எவ்வாறு வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதையும் அழகாக கூறிய திரைப்படம். எந்த பாத்திரத்திலும் நடிக்கும் தைரியம் கொண்ட தமிழ் சினிமா நாயகர்களின் பட்டியலில் ஜெயம் ரவியின் பெயரை சொல்லும் அளவிற்கும் தன் உழைப்பை கொட்டிக் கொடுத்திருப்பார் ஜெயம் ரவி, கோவனத்துடன் வருவது, மாட்டிற்கு பிரசவம் பார்ப்பது என அட்டகாசப்படுத்தி இருப்பார்.

தனிஒருவனாக

தனிஒருவனாக

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு பிரமாண்ட திரைக்கதையில் நடித்து ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார் ஜெயம் ரவி. இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிரபலமானது. தனக்குத் தகுதியான ஓர் எதிரியை நிர்ணயித்து அவனை அழிப்பதே ஐ.பி.எஸ் அதிகாரி ஜெயம் ரவியின் லட்சியமாக வைத்துக்கொண்டு தனி ஒருவனாக மிரட்டி இருந்தார்.

சூப்பரோ சூப்பர்

சூப்பரோ சூப்பர்

கோமாளி ஒரு வித்தியாசமான கதை,இந்த படத்தில் குடும்பத்து கதாபாத்திரங்களுக்குள் அப்படியே பிட் ஆகி இருப்பார் ஜெயம் ரவி. இந்தப் படத்தில் பள்ளி மாணவனாக கொஞ்ச நேரமே வந்தாலும் அந்த துறுதுறுப்பை கொட்டி இருப்பார். 16 வருடங்களாக கோமாவிலிருந்து திரும்பிய பின் கம்ப்யூட்டர், மொபைல் போன், ஊர் எப்படி மாறிப் போய்விட்டது என்பதை ஆச்சரியத்துடன் பார்க்கும் போதும்... என்னடா இப்படி பண்ணி வச்சி இருக்கீங்க என்று கேட்கும் போது சூப்பரோ சூப்பர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X