»   »  கங்கிராட்ஸ் சார்: செவாலியே கமலை நேரில் சந்தித்து வாழ்த்திய சிங்கம், சிறுத்தை, சண்டைக்கோழி

கங்கிராட்ஸ் சார்: செவாலியே கமலை நேரில் சந்தித்து வாழ்த்திய சிங்கம், சிறுத்தை, சண்டைக்கோழி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: செவாலியே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள உலக நாயகன் கமல் ஹாஸனை நேரில் சந்தித்து நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு செவாலியே விருது வழங்கி கவுரவிக்க உள்ளது பிரான்ஸ் அரசு. இதையடுத்து பிரபலங்கள், நண்பர்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சங்க உறுப்பினர்கள், சிங்கம் அன்ட் பேமிலி கமலை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிங்கம் அன்ட் பேமிலி

சிங்கம் அன்ட் பேமிலி

சிவக்குமார் தனது மகன்கள் சூர்யா, கார்த்தியுடன் வந்து கமல் ஹாஸனை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

ராம்குமார்

ராம்குமார்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தனது மகன் துஷ்யந்துடன் வந்து கமலுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸும் உடனிருந்தார்.

விஷால்

விஷால்

நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் திரளாக வந்து செவாலியே கமல் ஹாஸனை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

பிரபு

பிரபு

செவாலியே சிவாஜி கணேசனின் மகன் பிரபு தனது உடன் பிறவா அண்ணன் கமலுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

English summary
Kollywood celebs met Chevalier Kamal Haasan in person and wished him whole heartedly.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil