twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் முதல் விஜய் வரை...கோலிவுட்டின் மறக்க முடியாத ஆசிரியர்கள்

    |

    சென்னை : டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5 ம் தேதி ஆண்டுதோறும் இந்திய ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்களின் மதிப்பு, அவர்களின் கண்ணியத்தை உயர்த்தும் விதமாகவும், ஆசிரியர்கள் மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் கோலிவுட்டில் பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

    வெறும் நான்கு படங்கள்...நாட்டையே திரும்பி பார்க்க வைத்த டைரக்டர் வினோத் பிறந்தநாள் ஸ்பெஷல் வெறும் நான்கு படங்கள்...நாட்டையே திரும்பி பார்க்க வைத்த டைரக்டர் வினோத் பிறந்தநாள் ஸ்பெஷல்

    இப்படி ஆசிரியரை தலை நிமிர செய்யும் வகையில் எடுக்கப்பட்ட படங்கள் அனைத்துமே பெரும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளன. சில படங்கள் தேசிய விருதுதினையும் பெற்றுள்ளன. அப்படி தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட ஆசிரியர்கள் படங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    நம்மவர்

    நம்மவர்

    1994 ம் ஆண்டு சேதுமாதவன் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த படம் நம்மவர். கல்லூரி துணை முதல்வராக கமல் நடித்திருப்பார். பண பலத்தால் கல்லூரியை சீர்கேடாக்கும் மாணவர் கூட்டம். அவர்களை தனது ஸ்டையிலில் கையாண்டு, நல்ல வழிக்கு கொண்டு வருவதுடன், மாணவர்களிடம் ஒற்றுமையை கொண்டு வரும் பேராசிரியராக கமல் நடித்திருந்தார். முரட்டு தனமான தடாலடி ஆசிரியர் என்றாலும், அனைவரையும் ரசிக்க வைத்த கேரக்டர். இந்த படம் சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதினையும் வென்றது.

    ரமணா

    ரமணா

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து 2002 ல் வெளியான படம் ரமணா. கல்லூரி பேராசிரியராக வரும் விஜயகாந்த் லஞ்சம், ஊழலுக்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டி, ஒரு அமைப்பை உருவாக்குகிறார். அவர்களை வைத்து தவறு செய்யும் அதிகாரிகளை தண்டிப்பதன் மூலம், அதிகாரிகள் தவறு செய்வதை தடுப்பது தான் படத்தின் கதை. வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிக்கும் படி அமைக்கப்பட்ட ஆசிரியர் கேரக்டர். ஆசிரியருக்காக எதையும் செய்யும் மாணவர்கள் என சமூக பிரச்சனையுடன் கலந்து எடுக்கப்பட்ட படமாக ரமணா அமைந்தது.

    வாகை சூடவா

    வாகை சூடவா

    சுகுமாறன் இயக்கத்தில் விமல் நடித்து 2011 ல் வெளி வந்த படம் வாகை சூடவா. 1960 களில் நடப்பது போல் அமைக்கப்பட்ட இந்த கதையில், அரசு வேலை கிடைப்பதற்காக கிராமத்திற்கு தற்காலிக ஆசிரியர் பணியை ஏற்கும் ஹீரோவாக விமல் நடித்திருப்பார். செங்கல் சூளையில் குடும்பத்துடன் அடிமைகளாக வேலை செய்பவர்களின் மனங்களை பல தடைகளை தாண்டி மாற்றி, அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி அறிவு தர படாதபாடு படும் ஆசிரியர் பற்றிய கதை. கல்வியின் அவசியத்தை உணர்த்திய இந்த படம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றது.

    சாட்டை

    சாட்டை

    அன்பழகன் எழுதி, இயக்கிய படம் சாட்டை. சமுத்திரக்கனி பள்ளி ஆசிரியராக நடித்துள்ள இந்த படம் 2012 ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. பள்ளி கல்வி முறையை மாற்றி அமைத்து, மாணவர்களுக்கு வாழ்க்கை முறையை, தன்னம்பிக்கையை வளர்க்கும் கல்வி முறையை கற்றுத் தரும் பள்ளி ஆசிரியரை பற்றிய கதை. மாணவர்களுக்காக ஆசிரியர் சந்திக்கும் பிரச்சனைகளை விளக்கிய படம்.

    ராட்சசி

    ராட்சசி

    கவுதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்து 2019 ல் வெளி வந்த படம் ராட்சசி. ராணுவத்தில் உயரதிகாரியாக பணியாற்றும் ஜோதிகா, மறைந்த தனது காதலனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரின் கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பணியில் சேர்கிறார். பொறுப்பற்ற ஆசிரியர்களிடம் சிக்கி வீணான பள்ளியை, சீர் செய்யும் ஆசிரியராக ஜோதிகா நடித்திருந்தார். தனது தந்தையை உயிரிழந்ததற்கு கூட அரை நாள் லீவ் எடுத்துக் கொண்டு, பள்ளிக்கு வரும் பொறுப்பான ஆசிரியராக, படிக்க ஆசைபடும் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக சிறைக்கு செல்லும் ஜோதிகா, அவருக்காக போராடும் மாணவர்கள் என அழகாக அமைக்கப்பட்ட கதை.

    மாஸ்டர்

    மாஸ்டர்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து 2021 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசான படம் மாஸ்டர். கல்லூரி பேராசிரியராக இருக்கும் விஜய், சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு மாஸ்டராக செல்கிறார். அங்கு ரவுடி பவானியிடம் சிக்கி போதைக்கு அடிமையாகி, குற்றங்கள் செய்யும் சிறுவர்களை காப்பாற்றி நல் வழிப்படுத்த போராடும் மாஸ்டர் தான் விஜய். ஜாலியாக, அசத்தல் இசையுடன் ஆசிரியரின் போராட்டத்தை சொன்ன படம்.

    English summary
    kollwood honours teachers in lot of films. in recent years some of the films which celebrate teachers are listed out here. some movies won not only audiences hearts, but also won national wards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X