தமிழ் திரை உலகின் காதல் ஜோடிகள்…
கெமிஸ்ட்ரி இந்த வார்த்தை தற்போது சின்னத்திரை நடன ரியாலிட்டி ஷோக்களில் அதிகம் உச்சரிக்கப்படுகிறது. ஒரு படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைக்கு இடையே சரியான கெமிஸ்ட்ரி இருந்தால் மட்டுமே அவர்களுக்குள் ஒரு புரிதல் இருக்கும். அந்தப்படம் வெற்றிப் படமாக அமையும்.
எம்.ஜி.ஆர்-சரோஜா தேவி, சிவாஜி - பத்மினி ஜோடி தொடங்கி இன்றைக்கு கார்த்தி - காஜல் அகர்வால் ஜோடி வரை கெமிஸ்ட்ரி கூட்டணிகள் திரை உலக வானில் மின்னிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
தற்போது புதிது புதிதாக இளம் ஜோடிகள் அறிமுகம் ஆனாலும் 70 களில் தொடங்கி 2013 வரை சினிமாவில் தோன்றிய பல காதல் ஜோடிகள் ரசிகர்களின் ரசனைக்கு தீனி போட்டிருக்கின்றனர். ரீலாக இருந்த பல ஜோடிகள் ரியலாகவும் இணைந்திருக்கின்றனர். ரசிகர்கள் ரசித்த அழகான அந்த ஜோடிகளைப் பற்றி ஒரு பார்வை.

கமல் – ஸ்ரீதேவி
70 களில் தமிழ் திரை உலகில் வலம் வந்த காதல் ஜோடிகளில் கமல்-ஸ்ரீதேவி ஜோடியின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது. இவர்கள் நடித்த படம் என்றாலே ரசிகர்களிடம் தனி வரவேற்பும் கிடைத்தது.

சுரேஷ் – நதியா
சினிமா உலகில் கல்லூரி கால வாழ்க்கையைப் பற்றி எடுக்கும் போது இளமை நாயகனாக வலம் வந்தவர் சுரேஷ் அவருக்கு ஜோடி நதியா என்பது ட்ரேட் மார்க் முத்திரையாகிப் போனது.

ராம்கி – நிரோஷா
இந்த ஜோடியும் எண்பதுகளில் அறிமுகமானதுதான். செந்தூரப்பூவே படத்தில் தொடங்கிய நெருக்கம் இன்றைக்கும் தொடர்கிறது.

அஜீத் – சிம்ரன்
அஜீத் உடன் சங்கவி தொடங்கி பார்வதி ஓமனக்குட்டன் வரை பல ஜோடிகள் நடித்திருக்கின்றனர். என்றாலும் அஜீத் - சிம்ரன் ஜோடி இடையே தனி கெமிஸ்ட்ரி உண்டு என்றுதான் கூறவேண்டும். ஆனால் அமர்க்களம் படத்தில் நடித்த ஷாலினி ரீல் ஜோடி நிலையில் இருந்து ரியல் ஜோடியானதுதான் சினிமா உலகின் ட்விஸ்ட்.

விஜய் – அசின்
சிவகாசி படத்தில் தொடங்கிய விஜய் - அசின் கூட்டணி போக்கிரி தொடர்ந்தது. அந்த படத்தில் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி செம ஹிட் என்று பேச்சு எழுந்தது. அதனால்தான் காவலன் படத்திலும் ஜோடி சேர்ந்தது விஜய் - அசின் கூட்டணி.

மாதவன் – மீரா ஜாஸ்மின்
ரன் படத்தில் மாதவன் - மீரா ஜாஸ்மின் ஜோடி பெருவாரியான ரசிகர்களைக் கவரக் காரணம் அவர்களுக்கு இடையே செட் ஆன கெமிஸ்ட்ரிதான் என்கின்றனர்.

ஆர்யா – நயன்தாரா
ஆர்யா உடன் எந்த நடிகை நடித்தாலும் பார்யா என்பதுபோலத்தான் இருக்கும். அந்த அளவுக்கு எல்லா நடிகைகளுடனும் செம கெமிஸ்ட்ரிதான். ஆனால் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் ஆர்யா - நயன்தாரா ஜோடி செம ஹாட் என்பது போலத்தான் அமைந்திருந்தது.

சூர்யா – அனுஷ்கா
திருமணத்திற்கு முன் சூர்யாவிற்கு சரியான ஜோடி ஜோதிகாதான் அதனால்தான் ரீல் ஜோடி ரியல் ஜோடியாக ஆனது. இப்போது சூர்யாவிற்கு ஏற்ற சரியான ஜோடி அனுஷ்காதானாம் அதை சொன்னது ஜோதிகா.

கார்த்தி – காஜல் அகர்வால்
பருத்தி வீரன் தொடங்கி அலெக்ஸ் பாண்டியன் வரை சிலபல கதாநாயகிகளுடன் கார்த்தி நடித்திருந்தாலும் அவருக்கு சரியான ஜோடி காஜல் அகர்வால்தான் என்கின்றனர் அவரது ரசிகைகள்.

தனுஷ் – ஹன்சிகா
அது என்னவோ தனுஷ் உடன் நடிக்கும் நடிகைகள் எல்லாமே அவரை விட கொஞ்சம் மெச்சூர்டாகவே இருக்கின்றனர். 3 படத்தில் தனுஷ் - ஸ்ருதி ஜோடி செட் ஆனாலும் ஹன்சிகா உடன்தான் தனுஷ் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறது என்கின்றனர்.

சிம்பு – த்ரிஷா
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிம்பு - த்ரிஷா கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது. அது சிம்புவிற்கும் த்ரிஷாவிற்கு அதிக அளவில் ரசிகர்களைப் பெற்றுத்தந்தது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











